பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

87


பால் கொண்ட பற்றும் பாசமும் அற்றுப் போவர். உங்கள் வீடு, வீடு இல்லை! காடாகும். உங்கள் வாழ்க்கை, கோடிப்பணம் கொண்டதான்ாலும் இடுகாடாகும். அன்பற்றுப் போனதால், உங்கள் வாழ்க்கைப் பாலைவனமாகும்.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் கடைசிவரையில் அன்பு தழைக்கப் பாடுபடுங்கள். அன்பிலும் சிறந்த கவர்ச்சி ஒருவரை மற்றெருவர் பற்றியிழுக்கும் கவர்ச்சி, கவரும் ஆற்றல் வேறு இருக்காது. இல்லை, அன்பில்லாத ஒருவர் வெறும் தோல் போர்த்திய எலும்புக் கூடே என்பதை நெஞ்சில் நிறுத்தங்கள். அன்பின் வழியது உயிர் நிலை:

உங்களிடம் எந்தக் கவர்ச்சியும் காலத்தால் முதுமையால் விட்டு விலகிப்போகும். ஆனால் அன்பு மட்டும் உங்கள் கடைசி வரையும் அழகாகக் கவர்ச்சியாக உங்க்ள் அகத்தையும் புறத்தையும் காக்கும்; கவர்ச்சி சேர்க்கும் கர்க்கும்; அருளையும் சேர்க்கும்.

        அன்புற்று அமர்ந்த வழிக்கென்ய வையத்து
        இன்புற்றார் எய்தும் சிறப்பு - (குறள் 75)


அன்பைப் பற்றிய சில உண்மைகள்

நீங்கள் ஆண்டுகள் ஆக ஆக முதுமை அட்ைவீர்கள் என்பது உண்மைதானே-ஆகவே - வயது முதிர்ந்து முதுமையில் தள்ளாடும் போது உங்களுக்குத் தேவையானவற்றில் முதலாவது அன்பு ஒன்றே! ஆகவே இப்போதிலிருந்தே அன்பினைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வயது கூடுதல் ஆவது போலவே அன்பைக் கூடுதலாகப் பெருக்கி வாருங்கள்: சேர்த்தும் வையுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரம் வரும் அப்போது நீங்கள் உங்களுக்குள் சேர்த்துவைத்த அன்பினைத் தேவையான அளவுக்கு பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு உதவும் உண்மையல்லாத அனைத்தையும் அழித்து விடும் உண்மையான அன்பு; அன்பின் வெளிச்சத்தில் போலி நிற்காது. தாக்குப் பிடிக்காது. உங்கள் வாழ்க்கையினை அன்புதான் வலுப்படுத்திக் கொண்ட பின்பு உங்கள் நெஞ்சத்தில் இருக்கும் தன்னலத்தை அடியோடு அழித்துவிடும்.

தன்னைப் பேணிக் காத்திடுவது என்பது, தன்னலத்தின் முதற் சட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/91&oldid=1515488" இலிருந்து மீள்விக்கப்பட்டது