பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அன்பு வெள்ளம்


நாம் அன்பினில் வாழ்ந்து வந்தால், அன்பின் கனியை நாம் பெறுவோம். அன்பின் கனி என்பது ஏதோ அன்பு என்பது மரம் போலவும் அதிலே பழுத்து நம் மடியில் வீழ்வது போலவும் யாரும் கருதி விடாதீர்கள். அன்புக்கனி, என்பது, பேச்சில் அன்பு, செயலில் அன்பு, நடத்தையில் அன்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல், நல்ல ஒழுக்கம் இவை அனைத்தையும் தருவது அன்பாகும்!

கறுவுதல், பொறாமை வெறுப்புணர்ச்சி, பழிவாங்குதல் போன்றவை எல்லாம் கடந்துவிட்டவை - நடந்து முடிந்து விட்டவை என்று அறியுங்கள்.

ஒரு புதிய ஆணை வந்துள்ளது

ரு புதிய நாள் புலர்ந்தது. அந்தப்புதிய நாள் அன்பு நாள்: ஒரு பெண்மணி சொன்னார் 'எங்கள் வீட்டில் ஏற்பட்டுள்ள நிலை மாற்றம் பற்றிச் சொன்னாலும் உங்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியாது என்றே கருதுகிறேன்; இருந்தாலும் சொல்லு கிறேன். எப்போதும் எங்கள் வீட்டில் கொள்கைப் பிணக்கும் சின மூட்டலுமே இருந்து வந்தன. அதன் விளிைவினால், கடுமையான சொற்கள், சில சமயம் வெறுப்பும் வெளிப்ப்ட்டன. நிலை பேறுடைய வாழ்வறம் ஏற்ற பின்பு, எங்கள் வீட்டில், அமைதியும் அழகிய வாழ்க்கையும் மென்நயம் வாய்ந்த கடைப்பிடியும் இனிய சொற்களும் நடமாடுகின்றன. குழந்தை என்னிடமும் என் கணவரிடமும் அந்த இனிய சொற்களின் பரிமாற்றம் எல்லை யில்லாத இன்பத்தைத் தருகின்றன. காரணம், நாங்கள் இப்போது அன்பெனும் இன்பப் பேருலகில் வாழ்ந்து வருகிறோம்.

"அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இரவு வந்த என் கணவர் எங்கள் எல்லாரோடும் அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, என்னைப் பார்த்து:

"நம் வீடு இப்போது எவ்வளவு அழகியதாக மாறிவிட்டது பார்த்தாயா? ஏன் தெரியுமா? ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் கொடுத்துப் பெறுகின்றதால், குழந்தைகள் அனைவரும் சிந்தைத் தெளிவோடு இருக்கிறார்கள்! அன்பில் புதிய இன்ப மயமான சூழலில் அவர்கள் இருப்பதை உணர்கிறார்கள், உணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/94&oldid=1515490" இலிருந்து மீள்விக்கப்பட்டது