பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அன்பு வெள்ளம்


தாய்மையைக் காப்பதற்கும் அமைக்கப்பட்ட வழி அன்பு வழி ஒன்றே!

ஒரு கணவன் மனைவி நெஞ்சத்தில் இயேசுவின் அன் பினைப் போன்ற அன்பு இடம் பெற்றுவிட்டால் போதும் அவர் களுடைய இல்லறத்தைப் பேணிக்காத்திட வேறு சட்டமோ திட்டமோ தேவையில்லை.

        அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
        பண்பும் பயனும் அது. - குறள் 45

செம்மலர் போன்ற மலர்

ளமற்ற காடும் வறண்ட நிலமும் மகிழ்ச்சி தரும் மலர் வனமாகும். பாலைவனமும் உவகை தரும் செம்மலரை நிகர்த்த பூவாக மலர்ந்து மலராகும். முல்லையும் குறிஞ்சியும் பூத்துக் குலுங்கும். அங்கே உவகையும் தன்னை மலர்ந்து பாடும், பாட்டிசையும் கேட்கும். அதாவது பாழ்பட்ட வாழ்க்கையும் பண்படாத வாழ்க்கை கூட இயேசு கிறித்துவின் அருளால் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும். இன்ப எழிற் பூங்காவாக மாறும் என்பதுதான்் அப்படிச் சொல்லப்பட்டது. புரிந்தும் புரியாதபடி மறைபொருள் வைத்துச் மொழிவதுதான்் மறைமொழி இந்த மறைமொழியின் பொருள் இன்னதென்று அண்மைக்காலம் வரையில் நமக்குப் புரியாத ஒன்றாகத்தான்் இருந்தது.

அந்த மறைமொழி தீவினைப்பட்ட பாழ்பட்ட அல்லற்பட்ட மக்களை விடுவித்து நல்வாழ்வளிக்கும் மீட்பரின் மொழியாகும்.

வளமற்ற காடும் களர் நிலமும் பாலைவனமும் கூட செம் மலர், நீலமலர் அனைய பூக்கள் பூத்துக் குலுங்கும், அத்தகைய மாற்றத்தை உண்டுபண்ணும் புதிய அன்பினை உலகுக்கு அருளிச் செய்தவர் மீட்பர் இயேசு. அதுதான்் கிறித்தவத்தின் அற்புதம்! அதுதான்் இயேசு கிறித்து வாழ்வின் வியத்தகு தனிச்சிறப்பு: அறிவுலகுக்கு விடப்படும் மிகப்பெரிய அறை கூவல்.

இயேசுவின் வாழ்க்கை, நம்மை விழிப்புறச் செய்வது, அவர் ஆற்றிய அற்புதம் பற்றி அறியும்படிக்கில்லை. அவருடைய அன்பினைப் பற்றி அறியும்படிக்குத் தான்் அவர் ஆற்றிய அற்புதங்கள்.