பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அன்பு வெள்ளம்


அடக்கியாளும் தன்னலம் தான்் முதலுக்கும் தொழிலுக்கும் இடையே ஏற்படும் போராட்டத்துக்குக் காரணம். உழைப்பவர்களின் உள்ளங்களை உரிமை ஒலி எழாமல் செய்யும் முதலாளியப் போக்குக்கும் காரணம் தன்னலமன்றி வேறென்ன?

அழிவுக்குக் காரணமான போரினைத் தடுக்க வல்லது அன்பு - புதிய அன்பு. பேராசை மத சாதிகளிடையே வேற்றுமை, பகைமை, மக்கள் சமுதாயத்தினிடையே கலாம் விளைத்தல் ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கும் தன்னலத்தை அடியோடு அழித்தொழிப்பதும் புதிய அன்பு.

அவ் அன்பு, பொருளாதாரப் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கும். இயேசுவின் அன்பினை ஒத்த அன்பு எங்கெங்கு ஆட்சி புரிகிறதோ, அங்கெல்லாம் வேலை நிறுத்தம் என்பது நடவாது.

இயேசுவின் அன்பினால் ஆளப்படும் மக்களிடையே வழக்குகள் நடைபெறா. நீதிமன்றக் கூடங்கள் எல்லாம் இயேசுவின் வழிபாடுகள் செய்யப்படும் திருச்சபைகளாக, நற்செய்திப் பணி ஆற்றுவோரின் அவைகளாக மாறிவிடும்.

இயேசுவின் அன்பார்ந்த அன்பு ஒங்கி நிற்கும் இல்லங்களில் கணவன் மனைவியிடையே மனமுறிவு ஏற்படாது.

இந்த உலகிற்குப் புத்தம் புதிய அன்பினை இயேசு கொண்டு வந்தார். அதற்கு ஒப்புமை காட்டிட முடியாது. அவ் அன்பினைச் சுட்டிடச் சரியான சொற்களில்லை. அந்த அன்பினுக்குச் சரியான பொருளின் பண்பு விளக்கம் ஒன்று உண்டென்றால் இயேசு கிறித்துவே ஆவார்!

ஏதும் விளையாத வறள் நிலம் போன்ற வாழ்க்கையை, மணம் கமழும் அழகிய செம்மலர் பூத்திடும் நல்ல கொல்லையாக - பண்ணையாகச் செய்திட வல்லது புதிய அன்பு.

வளமற்ற வறண்ட காட்டு வழியே என் நண்பர் தங்கப்பா வோடு சென்று கொண்டிருந்தபோது"

"மனிதவாடையற்ற, ஏதும் விளையாத இந்தப் பாலை வனத்தை என்ன வென்று சொல்வது?" என்று சொன்னேன்.

"அது சரி, ஆனால் பெருமழை பெய்யுமானால், அழகின் உறைவிடமாக மாறுமே பாலையில் ஆங்காங்கு உள்ள மணல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/98&oldid=1219537" இலிருந்து மீள்விக்கப்பட்டது