பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

95


மேடுகள் எல்லாம் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் அல்லவா?” என்றார் நண்பர்!.

உண்மைதான்! கடவுளின் அன்பு மழை பெய்த களர் நிலம் கூட விளைநிலமாக மாறுமே அடடா அன்புறையும் வாழ்க்கை தான்் எப்படிப்பட்ட பெருமை வாய்ந்தது? என்று எண்ணிக் கொண்டேன்.

தங்கப்பாவுடன் உறவு கொண்ட பின்பு எங்கள் பாலை வனம் போன்ற வாழ்க்கை, மணம் கமழும் அழகிய செம் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைவனம் ஆக்கிவிட்டது. வாழ்க்கையில் நிரம்பி வ்ழிவது அன்பு. அன்பு வந்தபிறகு, வாழ்க்கையில் வெறுமையும் இல்லை, இன்பம் விளையாத வாழ்க்கையும் இல்லை. நண்பரின் அன்பு திகழும் இடம்மெல்லாம் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் ஆகிறது. கடவுள் அதனை அவ்வாறு ஆக்கி அளிக்கிறார். அவரால் தான்் அது முடியும்.

இப்ப்டி இன்பம் மருவும் மலர்ச் சோலையாக ஒவ்வொரு வருட்ைய் வாழ்க்கையும் உருவாக்கிடத் தேவை இயேசுவை நம் தோழராக்கிக் கொள்வதும் நம் விாழ்க்கையின் மீட்பராக அவரைப் போற்றி.ஏற்கக் செய்வதும் தான்். ஆப்படிச் செய்துவிட்டால், பிறகு நம் உள்ளத்தில் எழும் இன்னிசை என்னவாக இருக்கும். கேளுங்களேன்..

"கடவுள் என் மேய்ப்பர் எனக்கென்ன குறை? என் நெஞ்சத்தில் அன்பு நிரம்பி வழிகிறது; என் இத்ழ்களில் அவரைப் புகழ்ந்து பாடும் பண்ணும் பாடலும் தவழ்கின்றன"

காய்ந்து தீய்ந்து போன வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கை யிருந்தாலும் அதனை, கவின் மிக்க செம்மலர்ப் பூக்கள் பூத்துக் குலுங்கும் எழில் மிக்க இன்பத் தென்றல் உலவும் பூங்காவாகச் செய்திட வல்லது இயேசுவின் அன்பாம் புதிய அன்பு.

        அன்பே அறநெறி.ஈகத் திறவுகோல்
        அன்பே அறிவின்சுடர்.

அன்பே கடவுள்

நாம் நமது கடவுளாகிய தந்தையை அறிந்து கொண்டால் அன்றி "அன்பே கடவுள்" என்னும் இத் தலைப்புக்கு உரிய பொருள் காண இயல்ாது.