பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


துணை ஈர் ஒதி மாஅயோள்வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது.ஆயினும், என்றும்
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக் கொல்லி போல
தவாஅலியரோ, நட்பே! அவள் வயின்
அறாஅலியரோ, துதே - பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து
வழங்கல் ஆனாப் பெருநூ துறை
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!

-மதுரைக் கணக்காயனார் அக 338


“நெஞ்சே! பசும் பூண் பாண்டியன் மலைகள் உயர்ந்த இந்த உலகத்தில் சிறப்பித்துச் சொல்லப்படும் நாட்டை உடையவன். வீரம் மிக்க படைகளை உற்றவன்; பேரரசர் களுள் அறத்தை மேற்கொண்ட செங்கோலாட்சியுடன், பகைவரின் போர் செய்யும் அஞ்சாமையைக் கெடுத்து வளர்ந்தவன்; வெற்றி பொருந்திய திண்மையான தேரினையும் பலராலும் புகழப் படும் செல்வத்தையும் உடையவன். அம் மன்னனின் தெய்வம் பொருந்திய பொதிய மலையின் சாரலில் உள்ள கிளைத்த காந்தள் மலரைப்போல் நறுமணம் கமழும் நெற்றியையும் அளவொத்த நீண்ட கூந்தலையும் கொண்ட மாமை நிறம் உடைய தலைவியிடம் அவளது நுட்பமாகத் திரண்டவளை நம் முதுகை வளைத்துக் கொள்ளும்படி தழுவுதல் நமக்குக் கிட்டாது ஆயினும் பகைவரின் நாடு பாழாகும்படி அழிக்கும் பகைவரால் கிட்டுவதற்கு அரிய வன்மையையுடைய வெற்றி வாய்ந்த வேலையுடைய சேரனின் அகன்ற காட்டில் உள்ள கொல்லி மலையைப் போல், எந் நாளும் வேட்கை கொண்ட நெஞ்சத்துக்கு ஓர் உசாத் துணையாக நட்புக் கெடாது நிலை பெறுக!