பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

களையுடைய அல்குலையுடைய தலைவி தானே நம்மை அணையாதவிடத்து காண்பதற்கு அரியவள் ஆவாள் நான் உன்னை இடித்துக் கூறினும் அவளை நினைத்தலைக் கைவிடாய் தடுத்தாலும் அவளிடம் செல்லாமல் இருப்பதில்லை யான் உனக்கு உறவினன் அல்லனோ! உள்ளம் ஒன்றிய நண்பரைப் போல யான் சொல்வதைக் கேட்பாயா?” என்று தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறினான்.

448. என்ன துன்பம் இனி வருமோ?

என் ஆவதுகொல் தானே - முன்றில்
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ
இறலொடு கலந்த, வண்டு மூக, அரியல்
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஒங்கு வரைக்கு ஒக்கி, குறவர்
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி
‘யானை வவ்வின தினை’ என, நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?

- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் அக 348

“வீட்டின் முன் பக்கத்தில் உள்ள தேன்போற் சுவையுடைய திரண்ட அடியையுடைய மா மரத்தினது கோடைக்காலத்தில் முதிர்ந்த மணம் கமழும் கனிகளுடன் பிசினையுடைய பலா மரத்தின் சுளைகளையிட்டுத் தேனுடன் கலந்து ஆக்கிய வண்டு மொய்க்கும் அரியலான கள்; அது மூங்கிலின் நீண்ட குழாயில் அடைக்கப்பட முதிர்தலால் கடிய விரைவு உடைய பாம்பினது சீற்றத்தை ஒத்த வெறிகொண்டது அதனை முதலில் உயர்ந்த உச்சியையுற்ற தெய்வம் உறையும் மலைக்கு வைத்துப் படைத்துப் பின்பு தளிராலாய தழையுடையை உடுத்த மகளிர் உண்பிக்க அதனை உண்டு குறவர்