பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

நறுமணம் பொருந்துமாறு காற்று அசைத்தலால் அழகிய தளிர்களை யுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறுமணத் தாது உதிர்கிறது அதனால் பீலி பொருந்திய சிறந்த தோகையை உடைய மயில், வெவ்வேறு வகையுடைய மலையில் வாழும் வருடை என்ற விலங்குகளின் கொம்புகள் பொருந்திய இளைய கடாக்கள் செய்யும் ஒலியைக் கேட்டு அஞ்சியது; கூத்தாடும் களத்தில் ஊதப்படும் கொம்பைப் போன்று நீண்ட கணுக்களையுடைய அசையும் மென்மையான மூங்கில் இடம் வளையத் தங்கியிருக்கும் இத்தகைய மலை நாட்டையுடைய தலைவன் பிரிந்து சென்றதால் தனிமையும், மாறுபட்டதாயின் விரும்பாத பார்வையும், வாடைக் காற்றின் இயக்கமும், அதனுடன் வருகின்ற பனியையுடைய பருவமும், ஒளியுடைய, தன் மண்டிலம் மழுங்கிட ஞாயிறு மேலைக் கடலில் மறையும் துன்பம் மிக்க மாலைப் பொழு தும் ஆகி, எல்லாம் ஒன்றாய்க் கூடி நின்று வருத்துகின்றன இவ்வாறாகவும் நீ எங்ஙனம் உயிர் வாழ்கின்றாய் என என்னை வினவுகின்றாய் நம்மை நீங்காதிருத்தற்குரிய சூள் உரைத்துப் பின்பு பிரிந்த தலைவர், நம்மை நினையார், ஆனாலும், அவரது நாட்டில் நெருங்கிய இலைகளையுடைய பலா மரத்தினது பழத்தைக் கவர்ந்து எடுத்த கைகளை உடைய பெண் குரங்கு ஆண் குரங்குடன் துள்ளித் திரியும் மிக்க வலிமை பெற்ற தெய்வத்தையுடைய நீண்ட மலையில் இனிய ஒசையிடும் அருவியைக் கொண்டு உச்சியானது காணப் பெறுவதால் நான் உயிர் வாழ்கின்றேன்” என்று பக்கத்தே மறைந்து நிற்கும் தலைவன் கேட்பத் தலைவி உரைத்தாள்

455. எடுப்பர் வெறியாடல்

பிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
காடு கெடுநெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத்