பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

109



தூங்குதல் புரிந்தனர், நமர் என, ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் - தோழி!
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழுங் கோட் பலவின் பழம் புணையாக
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன் உறல் அறியாச் சோலை

விறல் மலை நாடன் சொல் நயந்தோயே!
- கபிலர் அக 382

தோழி “அருவியில் பாய்ந்த கரிய விரல் உடைய பெண் குரங்கு பலாவின் பழத்தைத் தெப்பமாகக் கொண்டு பக்க மலையில் உள்ள ஊரின் துறை முன்பு வந்து இறங்கும் வறட்சியை அடையாத சோலையையுடைய வெற்றி பொருந்திய மலை நாட்டின் தலைவனது சொல்லை நம்பி ஏற்றாய் மற்றவர்க்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டால் நல்லோர் தாங்கள் பிறரே ஆனாலும் வருந்தி அத்துன்பத்தைப் போக்க முயல்வர் தமக்கு உற்ற துன்பத்தைத் தமக்குப் பெரிதாய்க் கொள்ளாமல் அதனை எளிதாகக் கொள்வர். சான்றோரின் இயல்பு இத்தகையது

நம்மவர் கடப்பமரத்தில் கொடியை உயர்த்திக் கட்டி மாலை சூட்டி பல்வேறு ஒலியை எழுப்பும் தாளத்தின் வழிப்படும் ஒரு துக்கினை உடைய இனிய இசைக் கருவிகளைக் கொண்டு குறிஞ்சிக்குரிய முருகனைப் பாடுகின்ற பாட்டுக்கு ஏற்ப வெறியாட்டுச் செய்யும் பெரிய களம் சிறப்படைய மெல்ல, ஆடுதலை மேற்கொண்டனர் என்று தலைவனைக் காணுமிடத்து நீ அவனுக்குக் கூறுதல் வேண்டும்” என்று தோழி கூறினாள்

456.வெறியாடலை தாய் நிகழ்த்துவாள்

அம்ம! - வாழி, தோழி- நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின்
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குல் கிறு தினை கவர்தலின், கிளை அமல்
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஒப்பி
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள்இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து