பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

மறப் புலி உரற, வாரணம் கதற
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல
மலை உடன் வெரூஉம மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று
உரிதுஅல் பண்பின் பிரியுநன் ஆயின்
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலித்
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே.
- மோசிகீரனார் அக 392


“தோழி வாழ்க! இப்போது என் வேண்டுகோளுக்கு இரங்குவாயாக! கல் என்ற ஒசையுடன் முகிற்கூட்டம் மழை பெய்த காட்டில் உள்ள உயிர்கள் யாவும் அடங்கிய இரவு அதில் தினையை மேய்ந்த யானைக் கூட்டம் நிலை கெட்டு ஓடும்படி மலையில் உயர்ந்த பரணில் இருந்து குறவன் வீசிய வலிய விசை வாய்ந்த கவண் கல்லின் கடிய ஓசை ஒல்லென்று ஒலிக்க, அதனைக் கேட்டு அஞ்சாமையுடைய புலி உறுமும் யானை கதறும் அகலமான காட்டில் உள்ள மயில் கொண்டலின் இடியோசை கேட்டு அஞ்சும் இத்தகு பெரிய கற்களையுடைய மலை பொருந்திய நாட்டைக் கொண்ட தலைவன் காட்டில் தன் பெண்யானையை இழந்த தொங்கும் நீண்ட பெரிய கை பொருந்திய வெண்மையான கொம்பையுடைய ஆண்யானை உண்ணும் தழையை உண்ணாத நீக்கியதால் உண்டான வாட்டம் போன்ற அழகுடைய தன் தலைவனின் உடல் மெலிவினை நன்றாக அறிந்திருந்தும் மங்கையரான நம்மிடம் இரந்து நிற்பதை வெறுக்காதவன் ஆனான் ஆகிப் பொன்னால் செய்த பாவையைப் போன்ற அழகையும் விரும்பப்படும் மென்மைத் தன்மையையும் மடப்பமும் பொருந்திய தலைவியிடம் ‘தீங்கு இல்லையாம்படி எனக்கு நீ புணையாய்ச் செல்வாயாக! என்று கூறி வேண்டுகிறான்