பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



459. அழகிய கண்ணன் அவன்

கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட
கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன் பல் நாளும்,
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து அவன் வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன், ஆயிடைக்
கண் நின்ற கூறுதல் ஆற்றான், அவனாயின்,
பெண் அன்று, உரைத்தல், நமக்காயின் இன்னாது உம்
காணான் கழிதலும் உண்டு என்று, ஒரு நாள், என்
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஒர்
நாண் இன்மை செய்தேன்; நறுநுதால் ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஒம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை
ஐய, சிறிது என்னை ஊக்கி எனக் கூற,
தையால் நன்று என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின் வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன், ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,
ஒண்குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்.
- நல்லந்துவனார் கலி 37