பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
378. விரிந்தன வேங்கைப் பூங்கொத்துகள்

கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனைவிளைந்த தேறல், ஊழ் படு
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏனர், வேய் புரை பனைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும், இணையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை, பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர் கொண்டன்றே.

கபிலர் அக 2

“வளமான இலைகளை உடைய வாழையின் காய்ப்பு மிக்க பெரிய குலையில் உள்ள முதிர்ந்த இனிய கனியாலும், தம்மை உண்டவர் பிற கனிகளை உண்ணாமல் தடுக்கும் மலைச் சாரலில் உள்ள பலாப் பழத்தின் முற்றிய சுளையாலும், பாறை-