பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

விடியற்காலக் கூறுபாடுடையவனின் செல்வப் பொலிவு போல அழகை எய்துவாள் அங்ஙனம் பெற்ற அழகால் அயலவர் புறம் சொல்வதற்குரிய உரையை மாற்றுவதற்குரிய ஒரு பொருள் இருப்பின் அதை எங்களுக்குக் கூறு.

நின் வருத்தத்தை யான் தலைவனுக்குக் கூறினேன் அதைக் கேட்டு, நல்ல மலை நாடன், தோழி! வேங்கை மலர்கின்ற காலத்தைப் பார்த்துப் பெருத்த முன் கையை உடைய தோளை மணந்து கொள்வதற்கு வருவான்

461. முறையாய் மணக்க வந்தான்

“காமர் கடும் புனல் கலந்து எம்மொடு ஆடுவாள்,
தாமரைக் கண் புதைத்து, அஞ்சித்
தளர்ந்து, அதனோடு ஒழுகலான்,
நீள் நாக நறுந் தண் தார் தயங்கப்பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உறத் தழிஇப்போத்தந்தான் அகன் அகலம்
வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே.
அவனும்தான் ஏனல் இதனத்து அகிற் புகை உண்டியங்கும்
வான் ஊர் மதியம் சேரின், அவ் வரை,
தேனின் இறால் என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்.
சிறு குடியிரே சிறுகுடியிரே!
வள்ளி கீழ் விழா வரைமிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்.
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின்
வாங்கு அமை மென் தோட் குறவர்மட மகளிர்
தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் கொடுத்த கோல்.’
என ஆங்கு

அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்.