தொகை - வகை - உரை . த. கோவேந்தன்
125
பெண்டிர் நலம் வெளவி, தண் சாரல் தாது உண்னும்
வண்டின் துறப்பான் மலை.
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ்சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை.
என் நாம்
தன் மலை பாட நயவந்து கேட்டு, அருளி,
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற,
செம்மலை ஆகிய மலைகிழவோனே.
- கலி 40
தோழியே! நம் கருத்துக்கு வேண்டியபடியெல்லாம் சொற்களை அழைத்துப் பாடுவோம் என்று தோழி தலைவியை நோக்கிக் கூறினாள். அதைக் கேட்ட தலைவி அழகுடைய தினைப்புனத்தில் முகத்துக்குப் பொருந்திய கண்ணையும் மகிழ்வு அளிக்கும் சொல்லையும் உடைய மகளிர் நாணம் கொண்டு இறைஞ்சும் நிலை போல், முற்றித் தாழ்ந்த தினைக்கதிரை உருவி, சந்தன மரத்தால் ஆக்கப்பட்ட உரலில் இட்டு, முத்துடைய யானைக் கொம்பால் செய்யப் பட்ட உலக்கையை என்னிடத்தும் உன்னிடத்தும் மாறி மாறி உயர்த்திக் குற்றி, மருந்து இல்லாத நோயைச் செய்தவனின் பயன் தரும் மலையை வாழ்த்தி நம் கருத்துக்கு வேண்டியபடி யெல்லாம் அழைத்துப் பாடுவோம் என்று உடன்பட்டாள்.
அழகிய நெற்றியையும் அழகுபடுத்தும் கூந்தலையும் மூங்கில் போன்ற தோளையும் மலர் மணம் கமழும் கதுப்பை யும் உடையவளே! மூங்கில் ஒலிக்கும் முழைஞ்சை யுடைய மலையை முன்பு போல் அல்லாது நீ இயற்பட ஒன்றைப் பாடு; பின்பு யானும் இயற்படப் பாடுவேன் என்று தோழி சொன்னாள்
(தலைவி இயற்படப் பாடவில்லை ஆதலால் தோழி இனிப் பாடுகின்றாள்)
தன்னைச் சேர்ந்தவனின் வருத்தத்தைப் போக்கும் மலை, கொடிச்சியர் இரு கைகளையும் கூப்பித் தம் குறைநீங்க முருகன் உறையும் மலையைத் தொழும் கைகளைப் போன்று,