பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

மிக்க வேதனையுடைய கொத்துகள் அசையும் காந்தளின் தேன் ஒழுகும்படியாக, அக் காந்தள் அசையும்.

தான் புணர்ந்த மகளிரின் அழகுகெடின் அவரைவிட அதிகமாக வருத்தம் அடைபவனின் மலை, ஆண்குரங்கு களவொழுக்கம் ஒழிந்து மணந்து கொள்ளும் நிலைமையைக் கற்றுத் திரண்ட சுற்றத்தவரிடம் போய் மகள் பேசுவார் போல் மென்மையான விரலையுடைய பெண் குரங்கை எனக்குத் தர வேண்டும் என்று தனது குறையைக் கூறும் இயல்பு உடையது

கட்டு அவிழ்ந்த கொம்பு மறைந்த நெருங்கிய பூக்கள் பொருந்திய கிளையில் உள்ள தளிரைப் போன்ற அழகு வாய்ந்தது நம் மேனி இது கெடுமாறு நமக்கு நோயைச் செய்தானின் அரிய உச்சி மலைகளையுடைய பக்க மலை களை நாம் இனிப்பாடும் போது இயற்படப் பாடுவதை விட்டு இயற்பழித்தலாகிய ஒன்றைப் பாடுவோம்

குளிர்ந்த மலைச்சாரலில் தேனை உண்ணும் வண்டு அதைத் துறப்பது போல், மங்கையரின் அழகை நுகர்ந்து, அம் மங்கையரைத் துறப்பவரின் மலையாய் இருந்தபோதும், வானை அளாவும் மலையில் தெய்வமங்கையர் பந்து ஆடிய இளைப்பு நீங்கக் குளிர்ந்த அம் மலை அருவியில் நீராடுவர்.

தன்னைச் சேர்ந்தவரிடத்து நின்றும் நீங்கமாட்டோம் என்று இருப்பவனது மலை. அதில் சோம்பியிராத அழகை யுடைய யானைதான் விரும்பும் பெண்யானைக்கு முதல் சூலால் உண்டான வயா நோய்க்கு உள்ளம் பொருந்தி இனிய கணுவில் தோன்றிய, கிளையை உடைய நீண்டகரும்பினை முரிக்கும்

என்று நாம் அவன் மலையைப் பாடினோம். பாட, அதனை அம் மலைக்குரியவன் கேட்டு மெய் நிறைந்த மகிழ்ச்சி கொண்டான். கனவிற் புணர்ச்சியாதலால் தழுவி மனம் நிறையப் பெறாத மெல்லிய முலையை உடைய மார்பு அழகு அடையுமாறு நீ தலைமையுடையையாக வேண்டி அவன் மணம் செய்து கொள்ள வந்தான் எனத் தோழி உரைத்தாள்.

463. தந்தையும் திருமணத்துக்கு உடம்பட்டான்

பாடுகம், வா வாழி, தோழி: வயக் களிற்றுக்
கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,