பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

மறைந்து நின்றுகேட்டு அருளி மணம் செய்துகொள்ள வேண்டி வந்தனன் உன் தந்தையும் மணம் பொருந்திய வேங்கை மரத்தின் கீழ் இருந்து அம் மலைக்குரியவனுக்கு மணம் செய்து கொடுப்பதை விரும்பி உடன்பாட்டைத் தெரிவித்தான். ஆதலால் நமக்கு நன்மை உண்டாகிறது. எனவே, இனி நீ வருந்தாதே!

464. நிகழ்ந்ததை நினைந்து கலங்குதல்

மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த
முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி,
கறங்கு வெள் அருவி ஒலின் துஞ்சும்
பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன்
மறந்தான், மறக்க, இனி, எல்லா நமக்குச்
சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம், ஆயின் அவன் திறம்,
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்,
வள்ளை அகவுவம், வா இகுளை நாம்
வள்ளை அகவுவம், வா.

காணிய வா-வாழி தோழி!-வரைத் தாழ்பு
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா
நாணிலி நாட்டு மலை.

ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ
ஒர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்?
தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே-நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை.

கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை
நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்.

வரைமிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறா அல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ
எவ்வம் உறிஇயினான் குன்று.