பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

131



எஞ்சாது, எல்லா கொடுமை நுவலாதி
அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக் கொண்டவன்.
என்று யாம் பாட, மறை நின்று கேட்டணன்,
தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா,
சாயல் இன் மார்பன் சிறு புறம் சார்தர,
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என்
ஆய்இழை மேனிப் பசப்பு. - கலி 42

வீரமுடைய பெரிய புலியினது பழைய பகைமையைக் கெடுத்த முறம் போல் செவிகளை உடைய யானை அது தனக்கு முன் உள்ள தழையுணவை உண்டு, ஒலிக்கும் அருவி நீரைக் குடித்து அந்த அருவி தாலாட்ட உறங்கும் கரிய சோலையை உடைய மலை நாடன் நாம் வருந்த நம்மை மறந்தான். இனி அவன் முற்றும் மறப்பானாக! தோழியே, ஆராய்ந்து பார்த்தால் நாம் நமக்குச் சிறந்ததை அறிவோம் இனி யானையின் கொம்பால் மூங்கில் நெல்லைக் குற்றுதற்கு நாம் அவன் செய்த கொடுமையின் இயல்பை வள்ளைப் பாட்டாகப் பாடுவோம்! வா! எனத் தோழி இயற்பழித்தாள் அதைக் கேட்ட தலைவி தான் இயற்பட மொழிய எண்ணி, தோழி! நீ கூறியவாறின்றி அவன் திறத்தை நான் வள்ளைப் பாட்டாகப் பாடுவோம் வா! என்றாள்.

தோழி வாழ்க! நமக்கு அருள் காட்டாதிருக்கும் கொடுமைக்கு நாணாமல் இருக்கின்றவனது நாட்டின் மலையாய் இருந்தும், அது பக்க மலையில் தாழ்ந்த ஒளி மிக்க அருவியைப் பெற்றுள்ளது இதற்குக் காரணத்தை நாம் ஆராய்வோம், வா! எனத் தோழி இயற்பழித்தான்.

ஒரு பக்கத்தில் சாயாத நா நிற்கும் துலாக் கோலைப் போல் ஆராய்ந்து அறத்தையே விரும்பின் நெஞ்சத்தை யுடையவன் தன்னால் நுகரப்பட்டவர் நெஞ்சத்தை அழியு மாறு விடுவானோ? விடமாட்டான்! எனத் தலைவி கூறினாள்

நமக்கு அருளி இல்லறப் பயனை மேற்கொள்ளாது பயனற்றதை மேற் கொண்டவன் நாட்டு மலையாய் இருந்தும் குளிர்ந்த கோங்க மலர்ந்த பக்க மலையெல்லாம் பொன்னால் செய்யப்பட்ட பல ஆரம் அணிந்த யானைகள் போல் சிறந்து