தொகை - வகை - உரை த. கோவேந்தன்
137
பெரு மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல்
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஒடி,
நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென,
சிறுகுடி துயில் எழுஉம் சேண் உயர் விறல் வெற்ப!
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை.
புகர் முகக் களிறொடு புலி பொருகு உழக்கும் நின்
அகன் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ
கடை எனக் கமழும் நோய் கைம்மிக, என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை.
சுடர் உற உற நீண்ட கரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்டிக இணர் ஏய்க்கும் என்பதோ
யாமத்தும் துயிலவள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை?
என ஆங்கு
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்,
பிறை புரை நுதல் அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர். அவர் உவக்கும் நாளே.
- கலி 45
விடியற்காலத்து ஞாயிற்றை மறைக்கும் மூங்கில் நெருங்கிச் சூழ்ந்த அகன்ற மாணிக்கப் பாறை அதில் அமைந்துள்ளது ஒரு சுனை, அதில் காந்தள் அழகு பெற வளர்ந்துள்ளது. அதன் அழகிய குலையைப் பெறுவதற்கு அரிய மணிகள் பொருந்திய பாம்பு நீரை உண்பதாய் எண்ணி, பெரிய மலைகளையும் கீழ் மேலாக்குவது போல் விளங்கும் காற்றையுடைய மழையில் இடி இடிக்கின்றது அதனால் ஓசை எழுகின்றது. அந்த ஒசை ஒலிக்கையில் சிறுகுடியில் உள்ளவர் உறக்கத்தினின்று விழித்து எழுவர் இத்தகைய மிக உயர்ந்த வெற்றியையுடைய வெற்பனே! (காந்தளினைப் பாம்பு என எண்ணியதால் இடி இடித்தது) புணர்ச்சி பெறாமையால் வருந்திய என் தோழியின் பல இதழ்களை உடைய மலர் போன்ற உண்கண்கள், பசலை