பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

139வேங்கை அம் சினை என விறற் புலி முற்றியும்,
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆர்க்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!

ஏறு இரங்கு இருள் அடை இரவினில் பதம் பெறாஅன்,
மாறினென் எனக் வறி மனம் கொள்ளும், தான் என்ப
கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப்
பாடு ஒர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக.

அருஞ் செலவு ஆர் இடை அருளி வந்து, அளி பெறாஅன்,
வருந்தினென் எனப் பல வாய்விடுஉம், தான் என்ப
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக.

கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன்
புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்
அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான்ஆக
எனஆங்கு,
கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைக்
சிலம்பு போல், கூறுவ கூறும்,
இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே. - கலி 46

தான் தேன் குடித்த மலரானது தனித்து நிற்க, விரும்பிய மலர் மீது போனது தும்பி அது பெருமையையும் அழகையும் சிறகையும் நீல மணி போன்ற நிறத்தையும் கொண்டது அத்தகைய வண்டு, வாயிலிருந்து பெருகி வழியும் மதத்தையும் வெண்மையான கொம்பையும் உடைய தலைமையுடைய யானையுடனே புலி வந்து போரிட்ட பொழுது, வேங்கை மரத்தின் அழகிய கொம்பு என்று எண்ணி ஆற்றல் வாய்ந்த புலியைச் சூழ்ந்தது வேங்கை மரத்தின் கொம்பு என்று புள்ளிகளை உடைய யானையின் முகத்தை அணுகியது. வலி மிகும் சினத்தால் வாட் போண்ரச் செய்யத் தொடங்கிய