பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

அரசர்களை நட்பாக்கும் வழியினை ஆராய்ந்து நட்புறவு அமைதி செய்பவரைப் போல் அவ் வண்டு பலமுறையும் திரியும் இத்தகைய இயல்பு கொண்ட, பள்ளத்தில் பாயும் அருவிகளையுடைய திரண்ட மலைகள் பொருந்திய நாடனே! எனத் தோழி கூறினாள்

“ஐய யான் உனக்குப் பகற்குறி மறுத்து உன் வரவை இரவுக்குறியில் நொச்சிப்பூ விழும் துண்ணிய ஒலியையும் கேட்குமளவு நான் விழிப்புடன் எதிர்பார்த்திருந்தேன் நீ அல்ல குறிப்பிட்டுப் போனமை உணராமல், தலைவி யானே இரவுக்குறியும் மறுத்து விட்டதாவும், அதனால்தான் நீ இரவுக்குறியில் வரவில்லை என்றும் நினைத்து வருந்து கின்றாள்” என்று கூறினாள்

மணந்து கொண்டால் உயர்வதற்குக் காரணமான கடவுளுக்குரிய கடமைகளை யெல்லாம் மேற்கொண்டு அவளிடத்தே நிகழ்கின்ற வருத்தத்தைப் போக்கப் பலவற்றையும் ஆராய்கின்ற எண்ணத்துடன் நான் இருக்க, தலைவன் அரிய செலவையுடைய வழியில் நம்மை அருள வந்து நம் அன்பைப் பெறாது வருந்தினன் எனப் பல சொற்களையும் தலைவி கூறுவாள்.

மழைத்துளியை உண்ணும் விருப்பத்துடன் வானத்திலிருந்து பாடும் வானம்பாடி என்ற பறவை போல நீ செய்யும் அன்பைப் பெறுதலால் நிறைந்த அன்புடையளாய் இருந்த, மிக்க மழை பெய்யும் நள்ளிரவில் யான் நினக்குரிய குறியை மாற்ற நீ குறியிடத்தில் தலைவியைக் கூடப் பெறவில்லை வறிதே திரும்பினாய் என்று என் குற்றத்தை உனக்குத் தலைவி கூறுவாள்

இவளுக்கு உண்டான நோய் இவளைத் துன்புறுத்த அது கண்டு கண் உறங்காதவள் யான் என்னிடத்தில் நீ வெறுப்புக் கொண்டவன் போல், விளங்கும் தாழ்ந்த அருவிகளால் அழகு பெறும் நின் மலையின் பக்க மலை ஒருவர் கூறுவதையே கூறுவதைப் போல் விளங்கும் ஒளியுடைய வளையலை அணிந்த இவள் நோயினை இவள் ஆற்றும்படி ஒரு பொய்ம் மொழி கூறியாயினும் ஆற்றுவாய் இவளுக்கு நீ சொன்னதே சிறந்த சொல்லாகும்