பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

யானைக் கூட்டம் எட்டுத் திசைகளையும் காத்தற் தொழிலுக்குப் பொருந்தியவை பகைத்த உயிர்கள் எதிர்த்து நில்லாத வலியின விளக்கத்தைத் தரும் மணம் கமழும் மதத்தால் நனைந்த கன்னங்களை உடையன; அருவி விழும் அழகையுடைய மலையிடத்தில் வண்டுக் கூட்டம் மொய்க்கும் மலர்களையுடைய வேங்கையின் அழகைப் போல் வண்டுகள் மொய்க்கும் புள்ளிகளையுடைய முகம் கொண்டன; சொரியும் மழையையுடைய பக்க மலையிடத்தன; பெருமை கொண்ட வானில் வளர்ந்த மரங்களை யுடைய ஆற்றிடைக் குறையில் உள்ளன. இத்தகைய அவ் யானைக் கூட்டத்துடன் பெருத்த கழுத்தையும் மிக்க வன்மையையுமுடைய பெரிய புலி போர் செய்யும். இவ்வியல்பு கொண்ட மலையையுடைய நல்ல நாடனே!

தாழை இட்டு அடைத்ததைப் போன்று பொருந்திய காவலை உடைய தாயின் முன்பு, உன் மலைச்சாரலில் காந்தள் மலர் உகுமாறு போல் ஒலியுடைய வளையல் கழன்று விழுவன ஆயின. இவ்வாறு ஆவதற்கு இடைவிடாது மழை பெய்யும் இரவில் நீ செய்யும் குறியால் அழைக்கும் அழைப்பைச் செவியே கருவியாய்க் கேட்டதனால் ஏற்பட்ட ஒடுக்கத்தால் உயிர் வாழும் நாளை உடையவள் வருந்தும் தோளிடத்து அவை உனக்குச் செய்த தவறும் உண்டோ, இல்லையே.

இப்படியே, ஒரு களவொழுக்கம் உடையவள் என்று கூறுகின்ற அயலவர் முன்பு, நின் சுனையில் மிக்க மழையை ஏற்ற நீலமலர் போல் கண்கள் நீரைப் பெய்கின்றன. இப்படி யாவதற்கு, அது யாம் வருந்துவதற்குக் காரணமான இருள் என ஏங்கி, நீ வரும் தொழிலை விரும்பி எண்ணியதால் உண்டான வருத்தத்தால் வருந்துபவளின் உறங்காத கண்களில் அவை உனக்குச் செய்த குற்றம் உண்டோ, இல்லையே.

நுரை பொருந்திய இனிய நீர் வந்து ஆரவாரிக்கும். இளவேனிற் காலத்தில், உன் சோலையில் உள்ள ஒளி கெட்ட தளிரைப் போன்ற நிறக்கேடு ஏற்பட்டுப் பலர்க்கும் கூறுவதாக உள்ளது. இப்படியாவதற்குப் பல நாள்களும் நினைவு வருத்துகையால் பசலையால் படரப்பட்டவளது பொன் உரைத்த ஒரு நீலமணி இருக்குமாயின் அதைப் போன்ற