பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

147

ஐய, இதனால் எங்கட்குத் துன்பம் வருதலால் இனி இரவுக் காலத்தில் வரவேண்டா. இவளது பெருமையுடைய மென்மையான தோள்களைப் பல பூக்கள் பொருந்திய அகன்ற பாறையிலே கோலம் செய்யும் மலைச்சாரலிலே பகற் காலத்தும் பெறுவாய் என்றாள் தோழி

472. காதலியை நின்னிடம் சேர்ப்பேன்

வாங்குகோல் நெல்லொடு வாங்கி, வருவைகல்,
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி,
துங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்
இருள் தூங்கு சோலை, இலங்குநீர், வெற்ப!

அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில்மேல் அசைத்த கையை, ஒராங்கு
நிரைவளை முன்கை என் தோழியை நோக்கி,
படி கிளி பாயும் பசுங் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின், இனி நீ
நெடிது உள்ளது ஒம்புதல் வேண்டும்; இவளே
பல் கோட் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி
நல் கூர்ந்தார் செல்வ மகள்.

நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும்
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதுவலை.
அதனால்
கடு மா கடவுறுஉம் கோல போல், எனைத்தும்
கொடுமை இலையாவது அறிந்தும், அடுப்பல்
வழை வளர் சாரல் வருடை நன் மான்
குழவி வளர்ப்பவர் போல, பாராட்டி,
உழையின் பிரியின், பிரியும்
இழைஅணி அல்குல் என் தோழியது கவினே. - கலி 50

தானே வளையும் மூங்கில் கோலை நெல்லுடன் வளைத்துத் தின்னும் முழந்தாளையுடையது கரிய பெண்