பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை- உரை: த. கோவேந்தன்

149



473. கள்வன் மகன் நகைக்கூட்டம்

சுடர்த்தொடீஇ கேளாய், தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்த கொண்டு ஒடி,
நோ தக்க செய்யும் சிறு புட்டி மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே
உண்னு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை,
அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள், என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனோ,
அன்னை அலறிப்படர்தர, தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனோ, அன்னையிம்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி
நகைக்கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன். - கலி 51

ஒளியுடைய வளையலை அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேட்பாயாக தெருவில் நாம் இளமையில் மணலால் செய்த சிறிய வீட்டைத் தன் காலால் கலைத்தும் நாம் கூந்தலில் சூடிய மலர் மாலையை அறுத்தும், வரியை உடைய பந்தை எடுத்துக் கொண்டு ஓடியும், நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாக கட்டுக்கடங் காதவன், வளர்ந்த பின் முன் ஒரு நாளில் தாயும் நானும் வீட்டில் இருந்தபோது வந்தான் “வீட்டில் இருப்பவரே, உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்” என்றான் அவ்வாறு வந்தவனுக்கு தாய், “விளங்கும் அணியை அணிந்தவளே! உண்ணிரைத் தகட்டுப் பொன்னால் ஆன கலத்தில் எடுத்துக் கொண்டு போய் அவனை உண்ணச் செய்து விட்டு வா!’ என்றனள் அங்ஙனம் அவள் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மையை அறியாமல் போனேன். சென்றபோது அவன் என் வளையல் அணிந்த முன் கையைப்