உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


லும் வந்து வருந்திட இவள் ஆற்றாதவள். ஆனாள் அக் காலத்து இயற்கைப் புணர்ச்சியில் தெளியுறுத்திப் பிரிந்து அருளாது போனபின் இவள் மனம் வருந்துதற்குக் காரண மான துன்பம் இறந்து விடுதற்கு உயிரைப் போக்காமல் நிறுத்தவும் பொருந்தும் ஆனால் அதனால் பெற்றது என்ன? அதற்கு அக் கனவின் ஆற்றல் ஏற்றதாய் இருப்பதில்லையே!

என்று நான் கூறும்படியாய் அழியாத நோயினால் வருந்தி ஆறுதல் அடையாதவள் இவள் மலையில் வாடுமாறு வருந்திய தினைமுளை மழையைப் பெற அழகைப் பெறும். அதைப் போல் உன் அன்பைப் பெற்றால் இவளது நெற்றி அழகைப் பெறும்

இவ்வாறு தோழி தலைவனைப் பார்த்துச் சொன்னாள்.

476.நில்லா உலகத்து நிற்கும் புகழ்

‘கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற,
பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதை,
தொடிசெறி யாப்பு அமை அரி முன்கை, அணைத் தோளாய்!
அடி உறை அருளாமை ஒத்ததோ, நினக்கு என்ன,
நரந்தம் நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனி பற்றி,
பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை,
நலம் பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி, மோக்கலும் மோந்தனன்;
நறாஅ அவிழ்ந்தன்ன என் மெல் விரற் போது கொண்டு,
செறா அச் செங்கண் புதைய வைத்து,
பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;
தொய்யில் இள முலை இனிய தைவந்து,
தொய்யல் அம் தடக் கையின், வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின், மருட்டலும் மருட்டினன்.
அதனால் - அல்லல் களைந்தனன், தோழி நம் நுகர்
அருங் கடி நீவாமை கூறின், நன்று என
நின்னொடு சூழ்வல், தோழி, நயம் புரிந்து,
இன்னது செய்தாள் இவள் என
மன்னா உலகத்து மன்னுவது புரைமே. - கலி 54