உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

155

நீரால் நிறம் பெறுவனவான கொடியில் உள்ளவையும் கொம்பில் உள்ளவையும் ஆகிய பூப் போல் விளங்க, நீருக்கு முரணான பொடியை உடைய தீயால் செய்யப்பட்ட பொன் பூவால் செய்த மாலையையும், தொடி செறிந்த கட்டு வடங்கள் அமைந்த அழகையுமுடைய முன்கையையும், மெல்லிய தோளையும் உடையவளே! உன் அடியில் நான் தங்குதற்கு நீ அருள் செய்யாதிருத்தல் உனக்குப் பொருந்திய ஒன்றோ என்று சொன்னாள் பொன்னால் ஆன மகர வாயாய் அமைந்த தலைக் கோலம் விழுங்கிக் கிடந்த நரந்தம் பூ நாறும் என் அரிய கூந்தலின் முடியை ஒழியாது மிகப் பிடித்தான் அதில் ஒரு மாலையை விரலால் முறைப்படிச் சுற்றி அதை மோந்தும் பார்த்தான் அதுவே அன்றி நறவம் பூ மலர்ந்தாற் போன்று என் மென்மையான கையைத் தாங்கிக் கொண்டு அருளையுடைய சிவந்த கண் மறையுமாறு வைத்துக் கொல்லன் உலை மூக்கு வெப்பமாகப் பெருமூச்சு விடுவதைப் போல் பெருமூச்சையும் விட்டான் அதுவுமல்லாது தொய்யில் எழுதப்பட்ட இளைய முலையை இனிமையாய்த் தடவித், தொய்யில் படிந்த அப் பெரிய கையால், தான் விரும்பிய பெண் யானையை அருள் செய்யும் மயக்கத்தையுடைய ஆண் யானையைப் போல் என் உடல் முழுவதையும் தடவினான் அவனது செயலால் கலங்கிய கலக்கத்தைப் போக்கினேன் தோழி! இனி, நீயும் யான் விரும்பிய விருப்பத்தின்படி மணம் புரிந்து நின் மகள் நம் குடிக்கு வழு ஏற்படாமல் கற்புக்கடம் பூண்டாள்’ என்று நம் மனையில் நிகழும் மணம், அத் தலைவனை விட்டுப் பிரியாமல் தாய்க்கு அறத்தொடு நிற்கும் வகையில் கூறின் அது நமக்கு நல்லது என்று உன்னிடம் வேண்டினேன். நீ இவ்வாறு கூறின் நிலையற்ற உலகத்தில் நிலை நிற்கும் புகழ் நமக்குப் பொருந்தும் என்று தலைவி தோழியிடம் கூறினாள்

477. நாணமும் மடமும் இழக்கிலேன்

மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலேபோல்,
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு,
போழ் இடை இட்ட கமழ் நறும் பூங் கோதை,