பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



இன் நகை, இலங்கு எயிற்று, தேமொழி, துவர்ச்செவ்வாய்
நன்னுதால்! நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி:

நில் என நிறுத்தான், நிறுத்தே வந்து,
நுதலும், முகனும், தோளும், கண்ணும்,
இயலும், சொல்லும், நோக்குபு நினை.இ,
‘ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று;
மை தீர்ந்தன்று, மதியும் அன்று;
வேய் அமன்றன்று, மலையும் அன்று; -
பூ அமன்றன்று, சுனையும் அன்று;
மெல்ல இயலும், மயிலும் அன்று;
சொல்லத் தளரும் கிளியும் அன்று;
என, ஆங்கு
அனையன பல பாராட்டி, பையென,
வலைவர் போல, சோர் பதன் ஒற்றி,
புலையர் போல, புன்கண் நோக்கி,
தொழலும் தொழுதான்; தொடலும் தொட்டான்;
காழ் வரை நில்லாக் கடுங் களிறு அன்னோன்
தொழூஉம், தொடூஉம்; அவன் தன்மை
ஏழைத் தன்மையோ இல்லை, தோழி! - கலி 55

ஒலிக்கின்ற மின்னல் கொடிகள் இடையில் பிளந் தோடும் முகில்கள் போன்று பொன்னைக் கூறுபடுத்திய அழகையுடைய தலைக் கோலத்தை ஐந்து பகுதியையுடைய மயிரில் விளங்க வைத்து, பின்னால் தாழம்பூவையும் இடை யிலே இட்டு முடித்த மிகவும் மணக்கும் பூமாலையையும், இனிய நகையையும் விளங்கும் பற்களையும், இனிய மொழியை யும், சிவந்த வாயையும் உடைய நல்ல நெற்றியை உடைய வளே! உனக்கு ஒரு சொல்லைச் சொல்வேன்; அதைக் கேட்பாயாக:

தலைவன் என்னை மேலே போகாதே என்று என்னை நிறுத்தியவன். என் அருகில் நெருங்கி வந்து நெற்றியையும் முகத்தையும் தோளையும் கண்ணையும் சாயலையும் சொல்லையும் நோக்கி நின்றான் நின்றவன் உவமையைக் கூற நினைத்தான்.