பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன் :

157

நெற்றி வியப்புக் கொண்டதாய்த் தேய்ந்தது; என்றாலும் அது பிறைநிலவு அன்று. முகம் களங்கமற்றது; ஆயினும் முழு மதியும் அன்று தோள் மூங்கிலின் தன்மை நெருங்கியது; அது பிறக்கும் இடம் மலை அன்று கண் மலரின் தன்மை நெருங்கியது அது பிறக்கும் சுனை யான இடமும் அன்று சாயல் பொருந்த மெல்ல நடக்கும், மயிலும் அன்று சொல் சொல்லத் தளரும் ஆயினும் கிளியுமன்று என்று அங்கு அத்தன்மையுடைய உறுப்புகள் பலவற்றையும் பொய்யாகப் பாராட்டினான். வேடர் விலங்குகளின் சோர்வைப் பார்ப்பதைப் போல் என் மனம் அழிந்த நிலையைப் பார்த்து, புலையர் நோக்குவது போன்று வருத்தம் ஏற்படப் பார்த்து வணங்கினான் என்னைத் தீண்டவும் செய்தான் மதத்தால் அறிவை இழந்த குத்துக் கோலின் எல்லையில் நில்லாத ஆண் யானையைப் போன்றவன் பல முறையும் வணங்கவும் செய்தான் தீண்டவும் செய்தான் ஆதலால் தோழி! அவனது குணத்தில் அறியாமையோ இல்லை! இங்ஙனம் அவன் நடந்து கொள்ளவும் யான் நாணமும் மடமும் நீங்காமல் நின்றேன் என்று தலைவி தன் பெருமை இயல்பு தோன்றக் கூறினாள்

478. அரசனே தவறுடையான்

ஊர்க்கால் நிவந்த பொதும்பருள், நீர்க் கால்,
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு,
கழும முடித்து, கண்கூடு கூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ, அகல் மதி
தீம் கதிர் விட்டது போல, முகன் அமர்ந்து,
ஈங்கே வருவாள் இவள் யார்கொல்? ஆங்கே, ஒர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்புஎலாம் கொண்டு,இயற்றியாள்கொல்? வெறுப்பினால், வேண்டுஉருவம்கொண்டதோர்கூற்றம்கொல்?-ஆண்டார்
கடிது, இவளைக் காவார் விடுதல்; கொடி இயல்
பல் கலை, சில் பூங் கலிங்கத்தள் ஈங்கு, இது ஒர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்!
இவளைச் சொல்லாடிக் காண்பேன், தகைத்து.
நல்லாய் கேள்: