பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

ளோம். இங்ஙனம் இடையூறு மிக்க இரவில் வருவாயானால் நினக்குத் துன்பம் உண்டாகுமே என எண்ணுகின்ற மென்மைத் தன்மையுடைய எம் தலைவி உயிர் வாழ்ந்திருக்க மாட்டாள்." என்று இரவுக்குறி வந்த தலைமகனுக்குத் தோழி, மணம் கொள்ளக் கூறினாள்.


381. பகலில் தலைவியைப் பெறுவாய்


நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
கராஅம் துஞ்கம் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் -
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ? - ஓங்கல் வெற்ப-
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
வாழ்குவள் அல்லள், என் தோழி; யாவதும்
ஊறு இல் வழிகளும் பயில் வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால்
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
கொடுத் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில்,
பகல் நீ வரினும் புணர்குவை - அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.

- கபிலர் அக 18

உயர்ந்த மலையை யுடைய தலைவனே! அழகிய மலர்கள் நீரின் நிறமானது மறையுமாறு மலர்ந்து உதிர விரைந்து ஓடும் காட்டாற்று முதலைகள் கிடந்து உறங்குதற்கு இடமான கற்பாறைகளில் மோதி உயர்ந்து மடங்குதலால் உண்டாகும் சுழிகளை உடையது. தன் பெண் யானையுடன் கூடாத ஆண் யானையின் மதவெறி கெடும்படி மோதித் தன் வலிமையால் இழுத்துச் செல்லுகின்ற காண்பவர்க்கு அச்சத்தை ஏற் படுத்தும் வெள்ளம். அதை, அச்சமற்ற பன்றியைப் போன்று அஞ்சாது நீந்திச் சென்று, அச்சம் தரும் ஏறுவதற்கரிய