பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



ஆய் தூவி அனம் என், அணி மயிற் பெடை என,
தூது உண் அம் புறவு என, துதைத்த நின் எழில்
நலம்மாதர் கொள்மான் நோக்கின்மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறுஉம் என்பதை அறிதியோ? அறியாயோ?

நுணங்கு அமைத் திரள் என, நுண் இழை அணை என
முழங்கு நீர்ப் புணை என, அமைந்த நின் தட மென் தாள்
வணங்கு இறை, வால் எயிற்று, அம் நல்லாய்!
நிற் கண்டார்க்கு
அணங்காகும் என்பதை அறிதியோ? அறியாயோ?

முதிர் கோங்கின் முகை என, முகம் செய்த குரும்பை என,
பெயல் துளி முகிழ் என, பெருத்த நின் இள முலை
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நிற் காண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ? உணராயோ?
என ஆங்கு
பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய்,
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள், இனி:
நீயும் தவறு இலை; நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமரும், தவறு இலர்;
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டாங்கு,
‘பறை அறைந்தல்லது செல்லற்க என்னா
இறையே தவறு உடையான். - கலி 56

ஊரில் வளர்ந்திருக்கும் இள மரக்காவினுள் நீர் ஒடும் கால்வாயில் நின்ற கொழுமையான நிழலையுடைய ஞாழல் என்ற மரத்தின் கொத்துகளைப் பறித்துக் கொண்டு, பூவும் மயிரும் தமக்குள் கலக்கும்படி முடிந்து வாரி முடிக்கும்படி ஒன்று கூடிய தலை மயிர், தோளில் சிறிது குலைந்து விழ, நிறைவான வெண்ணிலா இனிய கதிர்களை வீசுவது போல முகமானது ஒளி பொருந்தி, நான் நிற்கும் இந்த இடத்துக்கு வரும் இவள் யார்? கொல்லிமலையில் வல்லவன் ஒருவனால் செய்து வைக்கப்பட்ட ஒப்பில்லாத பாவையோ! நல்ல மகளி ரின் நல்ல உறுப்புகள் எல்லாவற்றையும் ஒருங்கு சேர்த்து ஒருவடிவாய்ப் படைக்கப்பட்ட ஒருத்தியோ! ஆடவர் மேல் உள்ள வெறுப்பினால் தன்னை இயமன் என்ற அறிந்து