பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

161

மூங்கிலைப் போல் திரண்ட தோளையும், மணம் கமழும் நுணி வளைந்த கூந்தலையும், மான் போன்ற பார்வையையும், மயில் போன்ற சாயலையும் உடையவளே! அழகிய சிலம்பின் உள்ளே இடப்பட்ட மணி ஒலிக்க, ஒளிரும் அணிகள் விளங்க, நுடக்கம் உடைய கொடி போன்ற விளக்கத்தால் மின்னல் எனக் கண்ணுக்குப் புலப்படாத வருத்தம் என்ன சிறிதும் தெளியாத இடையில் கண்கள் விரும்பிச் சேர ஒட, உன் இளமைப் பருவ அறியாமையால் செல்வம் பொருந்திய உயர்ந்த தலைமை பெற்ற உன் தந்தையின் பழமையுடைய வீட்டினின்றும் அடிக்கப்படும் பந்துடனே தளர்ந்து ஒதுங்கிப் புறப்பட்டவளே! இப்போது யான் சொல்வதைக் கேட்பாயாக;

சில சொற்களையே யுடையவளே! குளிர்ந்த மலர் மாலையையும், உலர்ந்த சந்தனத்தையும் உடைய பாண்டியனின் உயர்ந்த மதுரை நகரில் தேன் பரவும்படி மலர்ந்த நீலமலரை வென்ற போரை உற்ற கண்கள், தலையில் பொருந்திய கொம்பையும் யானையையும் உடைய பகைவர்க்கு அப் பாண்டியன் வேல் மனத்தை வருத்துவதைப் போல், சிவந்து வருத்தம் செய்ய நீ இத்தகைய இயல்பு கொண்ட வளாய் உள்ளாய். இது நின் இளமைக்குத் தக்கதோ?

பொன்னால் செய்த காதணியை உடையவளே! பெய்யும் மழை போன்ற கொடையையுடைய பாண்டிய மன்னனின் அசோக மரத்தின் குளிர்ந்த சோலையிடத்து நின்ற மிக்க அழகையுடைய மாமரத்தின் தளிர் போன்ற மாநிறத்தை உடையவளே! அங்ஙனம் வருத்துவதற்கு மேல் பாய்ந்து செல்லும் குதிரை பூட்டப்பட்டட தேரையுடைய பாண்டியனால் சினம் கொள்ளப்ப்ட்டவர்களின் மார்பில் தைத்த அம்பைவிடத் துன்பத்தைச் செய்தல் உலகத்துக் கொடுமைகளில் மிக்க கொடுமையாகும்

வகுப்பு அமைந்த குளிர்ந்த மாலையை அணிந்த பாண்டிய மன்னனின் பொதிய மலையில் உள்ள அழகைக் கொண்ட கொத்துகளையுடைய வேங்கைப் பூவைப் போன்ற தேமலை உடையவளே! முத்து மாலையைத் தன்னிடம் உடைய நின் முலைகள், இப் பருவத்திலும் அப் பாண்டியனின் மிக்க