பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன் :

163என ஆங்கு
ஒறுப்பின், யான் ஒறுப்பது நுமரை,
யான் மற்றுஇந் நோய்

பொறுக்கலாம் வரைத்து அன்றிப்
பெரிதாயின் பொலங்குழாய்!
மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல்யான், நீ படு பழியே. - கலி 58

வாரப்பட்ட துணி வளைந்த கூந்தலையும், வளைந்த முன்கையை உடைய நீண்ட மென்மையான தோளையும், பெரிய அழகுற்ற மலர் போன்ற கண்களையும், பெண் மானின் மருண்ட பார்வையைப் போன்ற பார்வையையும், மழை பெய்யப் பெற்ற தளிரைப் போன்ற நிறத்தையும், அழகுமிக்க பிறைத்திங்கள் போன்ற நெற்றியையும், விழுந்த பின்பு முளைத்த கூர்மையான பற்களையும், விழுந்து முளைக்காத முல்லை அரும்பைப் போன்ற இடையை உடையவளே! காலில் உள்ள சிலம்பின் உள் இட்ட மணி ஆரவாரிப்ப, வரிசையான தொடியையுடைய கைகளை வீசியவளாய்ப் பெறுவதற்கு அரிய என் உயிரைக் கொண்டு, இளமையால் கைக் கொண்டதை அறியாமல், போகின்றவளே! யான் சொல்வதைக் கேட்பாயாக:

வருத்தத்தைத் தரும் காமநோய் மிகும்படி யான் சிறிது உயிருடன் இருக்கும்படி என் உயிரை வாங்கிக் கொண்டு உன் இளமையால் என் துன்பத்தை அறியாது போகின்ற வளே! உன்னிடம் தவறு இல்லை என்றாலும், உன்னைத் தவிர இந் நோயைப் போக்குபவர் பிறர் இல்லாத இதைச் செய்யும் அழகை அறிந்தும், தம் செல்வச் செருக்கால் உன்னை அலங்காரம் செய்து புறப்பட விட்ட உன் சுற்றத் தாரைத் தவறு இல்லாதவர் என்று கூறலாம் என்றால் கூறு அஃது அரிது

அறிவு நிறைவு ஒர்ப்பு கடைப்பிடி என்னும் ஒழுக்கம் தேய்ந்து மறத்தலை எனக்கு உண்டாக்கி நாள்தோறும் நான் வருந்துவதற்குக் காரணமான நீ செய்த நோயை நின் மடப்பத்தினால் அறிந்து கொள்ளாமல் போகின்றவளே!