பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

உன்னிடம் தவறு இல்லை என்றாலும் நிற்க மாட்டாது இளைக்கும் இடையையுடைய நின் வடிவை அறிந்தும் தன் செல்வச் செருக்கினால் உன்னை அலங்கரித்து வெளியே வரும்படி விட்ட உன் சுற்றத்தாரைத் தவறு உடையவர் அல்லர் எனக் கூறலாம் என்றால் கூறு, ஆனால் அஃது அரிது

மனம் அழிந்து வருத்தம் மிக்குக் கெடுமாறு வருத்தமாகி மென்மேலும் அடர்ந்து வரும் நோயைக் குறிப்பால் அறிந்து கொள்ளாதவளே! உன்னிடம் தவறு இல்லை என்றாலும் மெல்லப் படிப்படியாய் உயிரை வாங்காமல் விரைய உயிரை வாங்கும் உன் வடிவை அறிந்திருந்தும் தம் செல்வச் செருக்கி னால் அலங்கரித்துப் புறப்பட விட்ட உன் சுற்றத்தாரைத் தவறு உடையவர் அல்லர் என்று கூறலாம் என்றால் கூறு: ஆனால் அஃது அரிது

நான் ஒறுத்துக் கூறுவதானால் உன்னை வெளியே வரும்படி விட்ட உன் சுற்றத்தாரை உன்னையன்று, இக் காம நோய் பொறுக்கும் அளவுடையதன்றி மேலும் மிகுமானால், பொன் குழை அணிந்தவளே, யான் வருந்தும் மடல் ஏறி நீ அடையக் கூடிய ஒரு பழியை நான் உனக்கு ஏற்றுவது போல் உள்ளேன் இதை நீ அறிவாயாக! என்றான் காமுற்ற தலைவன்

481. உன் தவப் பயன் வீணாகும்

தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை
மூளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர்தொடி,
அடுக்கம் நாறு காந்தள் துண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப்புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை,
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்

விளையாட, அரி பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம்சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய் ஐம்பால் கண்டு, என் பால
என்னை விட்டு இகத்தர், இறந்தீவாய்” கேள், இனி.

மருளி, யான் மருள் உற, “இவன் உற்றது எவன்? என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நிற் பழிக்குங்கால்
வை எயிற்றவர் நாப்பண், வசை அணிப் பொலிந்து, நீ
தையில் நீர் ஆடிய் தவம் தலைப்படுவாயோ?