பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

பொலிவைப் பெற்று, நீ தைத் திங்களில் நீராடிய நோன்பின் பயனை அடைவாயோ? அடைய மாட்டாய்!

தலையில் கிடந்து அசையும் தலைப்பாளை’ என்ற அணிகலன் அணிந்தவளே! ஒளி கெடுமாறு இவன் மனத்தில் ஏற்பட்டுள்ள நோய் யாது என்று கேட்கும் அருள் இவளுக்கு இல்லை என்று கூற அதைக் கேட்டுப் பிறர் உன்னைப் பழிப்பர், இந்த அளவுக்கு நோன்பான விளையாட்டை உடைய பெண் தன்மையை உடையவளாய்ப், பிறர் இல்லத் தில் போய் ஐயம் ஏற்றுப் பாடி நீ அங்குப் பெற்றவற்றை மற்றவர்க்குக் கொடுத்ததால் உள்ள பயன் உனக்குப் பயன் அளிக்குமோ? அளிக்காது.

ஆராய்ந்து எடுத்த தொடியை உடையவளே! நீ அழகாய் உயிர்த்து இவன் மனத்தில் ஏற்பட்டுள்ள நோய் யாது என்று கேட்கும் வருத்தம் இவளுக்கு இல்லை என்று யான் சொல்ல, அதைக் கேட்டு அயலவர் உன்னைப் பழிக்கும் அளவில், சிறிய குழ இளமகனை வளர்த்து அவனுக்கு வேறொருத்தி யின் பெண்ணைக் கொள்வதற்குச் சிறு சோற்றைச் சமைத்துத் தோழியர்க்கு இட்டு, நீ நறிய நெற்றியையுடைய மகளிருடன் நோன்பைக் கொண்டாடி அந் நோன்பின் பயனானது உனக்கு வந்த பொருந்துமோ? பொருந்தாது!

என்று நீ மனம் வருந்தவும் யான் உனக்குக் கூறியது, உன்னை விரும்பியவர் திறத்து என் திறத்து வருந்தும்படி நீ செய்த கொடுமைக்கு, நீ ஓர் உதவியைச் செய்யாது போனால், நீ செய்த தீமையின் பயன் உன்னைப் பற்றாமல் விடாது அதுவேயன்றி அருளைக் கைவிடுவாயாயின் உனக்கு அத் தகைய நோன்புகள் பயன் தருவதில்லை என்றான் தலைவன்

482. தலைவனுக்குக் குறை நயப்பித்தல்

கணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல்,
மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல்,
நுணங்கு எழில் ஒண் தித்தி, நுழை நொசிமட மருங்குல்,
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!
‘கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு
உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்