பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

யால் அவர்க்கு அறியாமையைத் தரும் இடை வளைந்த முன் கையையுடைய வளையல் அணிந்த முன்கை ஆகிய வற்றை உடைய ஒள்ளிய தித்தியாகிய வரி நிறைந்த அல் குலை உடையவளே!

இனிய பற்களைப் பெற்றவளே, உன்னை நோக்கித் தொழுவான்; தொழுதபின்பு அணிமணி அணிந்தவளே! என்னை நோக்கிக் கண்ணுக்கு நிறைந்த நலம் கொண்ட மகளிரைப் பார்த்தவர்க்குக் காம நோய் மிகும்படி விரைவில் உயிர் போகும் துயரைச் செய்தல் அவர்க்குப் பெண் தன்மை ஆகாது என்று கூறி உருகி நின்று நடுக்கம் கொண்டான் இவன் ஒருவன் போரிடும் யானை போன்ற தன்மை கெட்டான்; மனமுடைந்து உள்ளுக்குள்ளே உருகுவான் போல் நின்றான் இவன் இங்கு வந்து என்ன செயலைச் செய்தான் என்றாள்.

அதைக் கேட்ட தோழி நம்மால் நிகழ்ந்த ஒரு காரணம் இல்லாமலேயே, தெருவில் கலங்கும் சிலரைப் பார்த்து உனக்கு அயலாய் இருப்பன இத்தன்மை வாரணவாசி (காசி) யில் உள்ளவர் செய்யும் அருளுடைமையாகிய இயல்பை நீ உன்னிடத்தே கொண்டாய். இதனால் நமக்கு என்ன உண்டாகும்?

அதைக் கேட்ட தோழி அடி பரந்த முலையையும் அணியையும் பூண்ட நல்லவளே! பெரிய உண்கண்ணை யுடைய நின் தோழி உணர்த்திய பொறுப்பதற்கு இயலாத மனக் கவர்ச்சியைச் செய்யும் வருத்தம், விரைய உயிரை அரிக்கும். ஒண்டொடி, அஃது உயிரை வாங்காதபடி இந் நோய் தீர்வதற்குக் காரணமான மருந்தை அளிப்பாயாக! அந்த மருந்து தான் மிகவும் அரியது அன்றே உன் முகம் பார்த்தல் காரணமாகப் பிறக்கும் அருளை மருந்துத் தன்மை யாய் உடையோள் என்று கூறுகின்றான் ஆதலால் அவன் நின் முகத்தை இக் காலத்தில் பெற்றால் மருந்தாகும் திருந்திழாய், அதுவன்றி வேறு மருந்து இல்லை இருக்குமானால் நாம் என்னை செய்வோம்?

அதைக் கேட்டுத் தலைவி பொன் செய்வோம் என்று குறும்பாய் உரைத்தாள்