பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

169

அவள் அவ்வாறு நகைத்துச் சொன்ன பின்பும் உலக ஒழுக்கத்தினின்று தப்பி ஒருவன் தெருவில் சொல்லும் சொல்லை உண்மை என்றுகொண்டு.அதன் உண்மையை உணராமல் நான் அதைத் தெளிதல் எளிது என்று சொல்லக் கடவோம்

அதைக் கேட்ட தோழி என் கருத்து இதுவானால் ஒருவன் இறத்தல் எளிது என்று சொல்வோம் என்றாள்

அதைக் கேட்ட தலைவி “மாட்சிமைப் படாத இந்த ஊரில் அம்பல் இனி அலராகுக என்று கருதி நாணத்தை யும் நிறையையும் விரும்பாத குடிப்பிறப்புக்குரிய ஒழுக்கம் பொருந்திய மனம் இல்லாதவனுக்கு இறந்து படுவேன் என்று சொல்லும் தன்மை அவனுக்கு இல்லை” எனக் கூறினாள் அதைக் கேட்ட தோழி என் புணர்ச்சியை உள்ளத்தால் எண்ணி, உறக்கம் கொள்ளாமல் நம் நட்பை விரும்பி நம்மை விரும்பியவனை நாணம் தடுப்பதால் எதிர் நின்று வரவேற்றல் இல்லை. அதற்குத் தக்கதொன்றை அறிவாயாக! என்றாள்.

483. மடலேறுவான் போல் தோன்றுகிறது

எல்லா இஃது ஒத்தன், என் பெறான்? கேட்டைக் காண்:
செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர்
அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று,
சொல்லுதல் உற்று, உரைக்கல்லாதவர்.போல
பல் ஊழ்பெயர்ந்து என்னை நோக்கும் மற்றுயான் நோக்கின்

மெல்ல இறைஞ்சும் தலை.

எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்
என், நீ பெறாதது? ஈது ஏன்?

சொல்லின், மறாதீவான்மன்னோ, இவள்?
செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று.ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று.

இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும்,
விழுப் பொருள்
யாது நீ வேண்டயது? பேதாய்! பொருள் வேண்டும்
புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ