பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

171

அவ்வாறு தலைவன் தன் நெஞ்சுடன் உசாவித் தம்மிடம் இரந்தவர்க்கு ஏதேனும் ஒன்றை முகம் மாறுபடாமல் ஈயாது உயிர் வாழ்வதைவிடப் பின் சாதலும் கூடும் என்றான்

அதைக் கேட்ட தோழி, “இவளுடைய தந்தை இரப்ப வர் மீதுள்ள அன்பால் எவருக்கும் சிறந்த பொருளைத் தரு வான் எனவே நீ வேண்டிய பொருள்தான் யாது?’ என வினவினாள்

அதைக் கேட்ட தலைவன், “சொல்வதன் குறிப்பை அறி யாதவளே, என்னிடம் பிறரிடம் போய்ப் பொருளை இரக்கும் வறுமை இல்லை மடப்பத்தை உடைய நோக்கம் பொருந்திய நின் தலைவி எனக்கு அருள்வதை யான் இரப்பேன்’ எனச் சொன்னான்.

அத் தன்மைதானோ! போரில் பகைவரைக் கொன்ற களிறு போன்றவனுக்கு ஒரு பெண்ணாய் இருப்பவள் அருள வேண்டியுள்ள வேண்டுகோள்தான் யாது?

இது தோழி தலைவன் நீங்கியபின் தலைவியிடம் வினவியது.

“ஒளியுடைய வளையலை அணிந்தவளை! இவன், என் தந்தை தன் உள்ளம் குறைபடா வண்ணம் வேண்டியவற்றைத் தந்து, தான் குறித்த ஒன்றைக் கைப்பற்றாமல் போகாத குணம் உடையவன், அதனால் நீ அருள செய்தலிலும் தாழ்வில்லை அவன் குறை வேண்டி நிற்கும் காலத்து யான் அவனை இகழ்ந்து சிரித்தாலும் பல முறையும் வருகின்றான் அங்ஙனம் குறையுற்று நிற்பதற்கு இடையே கள்வர் தாம் குறித்த பொருளைப் பார்க்காமல் பார்த்துக் கொள்வதைப் போல் நின்னைப் பார்க்காமல் பார்க்கின்றான். எனவே இவன் நாணம் இல்லாமையால் இவன் போக்கும் “நல்ல நெற்றியை உடைய தலைவி அருளாது போனால் பலரும் சிரித்து இகழும் மடல் மா ஏறுமாறு அமையும் அப்போது அவளுடன் எனக் குள்ள தொடர்பு ஊரில் அலராய் ஆகுமே” என்று எண்ணிய படி செல்பவன் போல உள்ளது

தலைவனின் இவ் இயல்பை விளக்கி மேல் இதற்குச் செய்யத் தக்கது அறிந்து செய் என்று தோழி குறை நயப்பித்தாள்