பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


484.நீரைக் கேட்டா நீர் பருகுவார்?

ஏஎ! இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்.

மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய் நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென் எல்லா
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?

சுடர்த்தொடி! போற்றாய் களை,
நின் முதுக்குறைமை, போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது,
நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?

செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோஐ
வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
‘மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வெளவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று.

‘அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனோடு
மாறு உண்டோ, நெஞ்சே நமக்கு. - கலி 62

இவன் ஒருவன் தன்னுடன் புணரும் குறிப்பு இல்லாத வரையும் புணர்ச்சி விருப்புக் குறிப்பு உடையவனாய்க் கையால் வலியப் பிடித்துக் கொள்கின்றான் ஆதலால் இவன் நாணம் இல்லாதவன் என்று தலைவி கூறினாள்

அதைக் கேட்ட தலைவன் அப் புணர்ச்சிக் குறிப்பின் பகுதியான மெய்ப்பாடு எல்லாம் உன்னிடம் பொருந்தி யிருப்பினும், பொருந்தாத இடத்திலும் உள்ள நன்மை தீமையை நீ அறிதல் வேண்டும் பூக்கள் நெருங்கியுள்ள மெல்லிய கொத்து நீங்காத கொடி போன்றவளே! பூவாத