பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொகை - வகை - உரை த. கோவேந்தன்

173

கொடியைப் போன்றவளே! உன் மேனியைத் தழுவுதற்கு இனிதாய் உள்ளது அதனால் தழுவினேன் என்று கூறினான்.

அவன் உரைத்ததைக் கேட்ட தலைவி “ஏடா! தங்கட்கு இனிதாய் இருக்கின்றது என்று எண்ணிப் பிறர்க்கு இனிய தல்லாததை வலியச் செய்வது இன்பத்தை அளிக்குமோ?” என்றாள்.

அதைச் செவியேற்ற தலைவன், “ஒளியுடைய வளையலை அணிந்தவளே! உன் அறிவை வெளிப்படுத்த வேண்டா! அதைக் கைவிடு! யான் சொல்வதைக் கேள்! அரிய நீரை அருந்துபவர் தண்ணிர் விரும்புபவர்க்கு அஃது இனியது என்று அருந்துவதல்லாது அந் நீர்க்கு இனியதாய் இருக்குமென்று எண்ணி அருந்துவாரோ!” என்று கூறினான்

ஐந்து தலைகளை உடைய பாம்பினது பார்வையில் அகப்பட்டது போல் எனக்கு வருத்தம் உண்டாயது மேற்கொண்டு செய்யக் கூடியதை அறியேன் இனி "நான் ஏது செய்வேன்.” என்று தன் மனத்துடன் சொல்லி, அதன் பின் "களங்கம் இல்லாத நிலவினைப் போல் விளங்கும் முகமுடைய மகளிரை வலியப் புணர்வதும் ஒரு மணமே ஆகும் என நூல் கண்டது!” எனத் துணிந்து சொன்னான் .

அதைக் கேட்டத்லைவி "நூலில் உயர்ந்த மணம் கூறப்பட்டு உலகத்து ஒழுக்கமும் அது வாயின், அவனும் யான் அவனை மறுத்துக் கூறும் சொல்லைக் கொள்ளாது செயலற்று வருந்துவானாயின், அதுவே அன்றி, அவனது மனத்தில் முற்பிறப்பில் 'நானும் அவளும் வேறு அல்லேம் என் எண்ணம் உண்டாகியிருக்குமானால், என் நெஞ்சே, அவனுடன் நமக்கு இனி மாறுபாடு உண்டோ” என்று அவனைப் புணர்வதற்கு உடம்பட்டுக் கூறினாள்.

485. தோழி கூறுகின்றாள்

நோக்குங்கால், நோக்கித் தொழுஉம், பிறர் காண்பார்
தூக்கு இலி, தூற்றும் பழி எனக் கை கவித்துப்
போக்குங்கால், போக்கு நினைந்த இருக்கும்;
மற்று நாம் காக்கும் இடம் அன்று, இனி.