பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

180

வருத்தினால், இவ்ஊரில் நீ பெற்றுவரும் பலியைப் பெறாமல் செய்து விடுவேன் அதனை நான் கொண்டுவிடுவேன்!” என்றான் பல சொற்களையும் இப்படிப் பேசினான்

அந்த முதிய பார்ப்பான் என்னைப் பெண் பேய் என்று எண்ணி அஞ்சியதை யான் அறிந்து, ஒரு கையால் மணலை அள்ளி ஒழியாது அவன் மீது தூவினேன் அவன் அதனைக் கண்டு அங்கிருந்து விரைந்து கதறியபடி ஊர்க்கெல்லாம் கேட்கும்படி கூப்பாடிடத் தொடங்கினான்

தனியாய் நிற்கும் மகளிரைக் கண்டால் தன் காம வேட்கையால் மேல் விழுந்து செய்யும் அவனது செயல் இது இந்த நாடகத்தால் நம் தலைவர் நம்மைக் குறியிடத்து வந்து நம்மைக் காணும் காட்சி கெடும்படி நமக்குத் துன்பமாய் அமைந்தது இது நிகழ்ந்தது எப்படிப்பட்டது என்றால் ஒன்றுக்கும் கெடாத வன்மையையும் வளைந்த வரியையும் அஞ்சாமையையும் உடைய புலியைக் கொள்வதற்கு வைக்கப் பட்ட வலையிலே அத் தொழிலுக்கு வேறாய்க் குறுநரி அகப்பட்டுக் கொண்ட தன்மையாயிற்று! எனவே இனிமேல் நமக்கு இரவுக் குறி இல்லை போலும்” என்றாள்