பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



ஞாழல், மெளவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறு செங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக் குலைக்கள் கமழ் நெய்தல்,
பாங்கர் மராஅம் பல் பூந் தணக்கம்
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால், அங்கு, அடைய மலிவனம் மறுகி,
வான் கண் கழி இய அகல் அறைக் குவைஇ.

தழை உடுத்து மாலை சூடி இருத்தல்

புள் ஆர் இயத்த விலங்கு மலைச் சிலம்பின்,
வள் உயிர்த் தெள் விளி இடை இடைப் பயிற்றி,
கிள்ளை ஒப்பியும், கிளை இதழ் பறியா,
பை விரி அல்குல் கொய்தழை தைஇ,
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை, எம்
மெல் இரு முச்சி கவின் பெறக் கட்டி,
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத்
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக

தலைவன் வருகை

எண்ணெய் நீவிய, சுரி வளர் - நறுங் காழ்,
தண் நறுந் தகரம் கமழ மண்ணி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை