பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

மட மதர் மழைக் கண், இளையீர் இறந்த,
கெடுதியும் உடையேன்” என்றனன். அதன் எதிர்
சொல்லேம், ஆதலின், அல்லாந்து -

தலைவன் தலைவி சொல்லை எதிர்ப்பார்த்தல்

“கலங்கிக்
கெடுதியும் விடிஇர் ஆயின் எம்மொடு
சொல்லலும் பழியோ, மெல் இயலர், என,
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின், இம்மென இமிரும்
மாதர் வண்டொடு, சுரும்பு நயந்த இறுத்த,
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஒச்சி,
கல்லென சுற்றக் கடுங் குரல் அவித்து எம்
சொல்லற் பாணி நின்றனன் ஆக--

யானை சினந்து வர மகளிர் நடுக்கம்

இருவி வேய்ந்த குறுங் காற் குரம்பை,
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,
தேம் பிழி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து
சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து,
இரும் புனம் நிழத்தலின், சிறுமை,
நோனாது, அரவு உழற், அம் சிலை கொளிஇ, நோய்மிக்கு,
உரவுச் சின முன்பால் உடல் சினம் செருக்கி,
கணை விடு (பு), புடையூ கானம் கல்லென,
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர,
கார்ப் பெயல் உருமின் பிளிறிச், சீர்த் தக
இரும் பிணர்த் தடக் கைஇரு நிலம் சேர்த்தி,
சினம் திகழ் கடாஅம் செருக்கி, மரம் கொல்பு,
மையல் வேழம், மடங்கலின் எதிர்தர,
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென,
திருந்து கோல் எல்வளை தெழிப்ப, நாணுமறந்து,
விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொருந்தி,
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க -