பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

17

அன்னை முதலியவர் என் நோய்க்குச் சிறிதும் தொடர் பில்லாத முருகனுக்கு வெறியாட்டெடுத்து அழிந்த அவரின் அறியாமையை நினைந்து யான் உடல் பூரித்துச் சிரித்தேன் அல்லேனோ!” எனக் கூறினாள் தோழி.


383. மார்வை எய்துதல் அரிதாகும்

மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் - தோழி!
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
இருவி தோன்றின பலவே. நீயே
முருகு முரண்கொள்ளும் தேம்பாய் கண்ணி
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தன; யாழ நின்
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி,
ஆங்கு ஆங்கு ஒழுகாய் ஆயின், அன்னை
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' எனப்
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.

- பாண்டியன் அறிவுடைநம்பி அக 28

"தோழியே! ஒருவர் உடலினின்றும் ஒருவர் உடம்பு அகலாமைக்குக் காரணமாய் மேம்பட்டு வரும் காமப் பெருக்கினால் உனக்குறுதியை நீ அறிய மாட்டாய் அங்ஙன மாயினும் உனக்கு இப்போது உறுதியானதை யான் கூறு வேன், கேட்பாயாக: நீர் பாய்ச்சுதல் இல்லாமையால் அருவி நீர் ஓடாமல் விளங்கும், பசிய கால்வாய் இடந்தோறும் கதிர்கள் வளம் கொண்டவையாய் நீண்ட தினைப் பயிர்கள் கிளிகள் கொய்வதற்கு முன்பே உதிர்ந்தன; ஆதலால் ஆங் காங்குப் பற்பல தட்டைகள் தோன்றின. நீயோ வேறுபட்ட பல மணங்களும் வீசும் தேன் ஒழுகும் கண்ணியுடையவனான விரைந்து ஓடும் நாய்களுடன் பல மலைகளையும் கடந்து செல்லும் வேடுவனை எய்தும் அளவில் அமைந்தாய். நின் மலர்கள் பொருந்திய மாலை அசைய அடிக்கடி எழுந்து