பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு,
“சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா, வள நகர் பொற்ப,
மலரத் திறந்த வாயில் பலர் உண,
பைந் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசைஇல் வான் திணைப் புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,
நின்னோடு உண்டலும் புரைவது, என்று”, ஆங்கு
அறம் புணை ஆகத் தேற்றிப், பிறங்கு மலை
மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி,
அம் தீம் தேள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து,
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,
வான் வரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை, அப் பகல் கழிப்பி,
எல்லை செல்ல, ஏழ் ஊர்பு, இறைஞ்சி,
பல் கதிர் மண்டிலம், கல் சேர்பு மறைய

மாலைக் காலம்

மான் கணம் மரமுதல் தெவிட்ட, ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஒங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ,
பாம்பு மணி உமிழ, பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட, வள மனைப்
பூந் தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயர, கானவர்
விண் தோய் பணவைமிசை ஞெகிழி பொத்த,
வானம் மா மலைவாய் சூழ்பு கறுப்ப, கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினை இய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துணைஇய மாலை துன்னுதல் கானூஉ -