பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர்
குழு மலை விடரகம், உடையவால் எனவே. - கபிலர் பத் 8

தோழி, அறத்தொடு நிற்றல்

தாயே, வாழ்க! அன்னையே யான் கூறுவதைக் கேட்பாயாக ஒளி பொருந்திய நெற்றியினையும், மெல்லிய கூந்தலையும் உடைய என் தலைவி தன் மனத்தில் மறைத்திருக்கும் பொறுத்தற்கரிய நினைவுகள் அவளை மெலிவிக்கின்றன அதனைப் போக்க வேலன், கட்டுவிச்சியிடம் வினவியும் வேறுபல தெய்வங்களை வாயால் துதித்தும், தொழுதும், மலர்த் துரவி வழிப்பட்டும் கூடப் பயனில்லை. அவள் அழகு கெடவும், தோள் மெலியவும் வளை கழலுதலைப் பிறர் அறிய நேரிட்டது அவள் படும் துன்பத்தை அறிய மாட்டாது நீ துன்பப்படுகின்றாய்! அவளது துயரைக் கூற மாட்டாது நானும் என்னுள்ளே அடக்கி நிற்கின்றேன்!

தலைவியின் அன்புமிகுதி

முத்து, மணி, பொன் ஆகியனவற்றால் ஆகிய அணிகலன் கெடுமானால், தட்டாரால் அதனை முன்பிருந்தபடியே செய்ய வியலும் குல ஒழுக்கமும், மேம்பாடும், பண்டைய தன்மையினின்றும் கெடுமானால் அந்த அழுக்கைப் போகும் படிக் கழுவி பழைய ஒழுக்கத்தை நிலை நிறுவுதல் இயலாது தொல் அறிஞர்களுக்கும், குற்றமற்ற மெய்யுணர்வுடைய மேலோர்க்கும் கூட அஃது எளிய தொரு செயல் அன்று! தலைவி, “என் பெண்மையும் மடனும் ஒருசேரப் போகும் படி நெடுந்தேர் உடைய என் தந்தையின் காவலைக் கடந்து தலைவனும் யானும் மேற்கொண்ட காதல்மணம் இதுவென நாமே அன்னைக்குக் கூறினால் பழியும் உள்ளதோ?” என்றாள் மேலும் “அப்படி கூறியும் நம் நெறிப்படி தலைவர்க்கே நம்மை நேராராயினும் பொறுத்து மறு பிறவியிலேனும் நாம் அவருடன் இணைவோம்” என்று கொண்டு கூறி மான் நோக்குடைய தலைவி நீங்காத நோயுடையளாகத் தேம்புகின்றாள்