பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

193



தலைவன் வருகை

பறவைகளின் ஒலியாகிய இசையில் மலையின் பக்கங் களின் தினைப்புனங்களில் பெரிய ஓசையுடன் கூடிய சொற் களை இடையிடையே சொல்விக் கிளிகளை ஒட்டினோம் புற இதழ்களை நீக்கிக் கொய்த தழையை ஒழுங்கு செய்து பாம்பின் படம்போல் பரந்த அல்குலை உடைய இடையில் கட்டி உடுத்தோம். பல்வேறு நிறத்தையுடைய அழகான மாலைகளை எங்கள் மெல்லிய கருமையான கூந்தலில் கவின் பெற அணிந்தோம் நெருப்புப் போலும் தளிர்களையுடைய அசோக மரத்தின் குளிர்ந்த நிழலில் இருந்தோம்

அப்போது, அங்கே வந்த தலைவன் பல காலமும் எண்ணெய் வார்த்து வளர்க்கப்பட்ட தலை மயிருக்குக் குளிர்ந்த நறுமணம் வீசும் மயிர்ச் சந்தனத்தை மணம் கமழப் பூசியிருந்தான். அந்த ஈரம் உலரும்படி விரலாலே அலைத்து, பிணிப்பை அவிழ்த்து விடுத்து, அதற்கு நறுமணம் வீசும் கரிய வயிரமுடைய அகில் புகையை ஊட்டியிருந்தான் யாழ் ஒலி போல் பாட்டினை உடைய வண்டுகள் ஆரவாரிக்கும் படி, இன்மணத் தைலம் பூசிய கரிய நிறத் தலையில் மலை யில் பூத்தனவும், நிலத்தில் மரக்கிளைகளில் பூத்தனவும், சுனையில் உருவானவையுமான வண்ண வண்ண மலர்களைச் சூடி இருந்தான். ஆராய்ந்த மலர் மாலையுடன் வெண்தாழை மடலினால் ஆன கண்ணியுடையவனாக இருந்தான் பசிய பிச்சி மலர், அழகிய அலரி ஆகிய இணைத்துக் கட்டிய சரத்தை ஒரு புறம் தொங்க விட்டுத் தீப் போன்ற அசோகந் தளிரை ஒரு காதிலே செருகிக் கொண்டிருந்தான் சந்தனம் பூசிய மார்பில், அணிகலன்களோடு மாலையணிந்து, இறுகின முன் கையில் வரிவில் ஏந்தி, அம்பு பிடித்து, நுண்வினை ஆடை யினைத் துளக்கமின்றி அணிந்திருந்தான். பொன் கழல்கள் நடைக்கேற்ப, ஏறுவதும் இறங்குவதுமாய் ஒலித்தன.

வேட்டை நாய்கள் - தலைவன் வருகை

பகைவர்தம்நாட்டைப் பாழாக்கும் வலிமிக்கஎதிரிகளைப் புறமுதுகிட்டோடச் செய்யும், பல வேலினையுடைய வீரரைப்