பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

போல், சினத்தால் செருக்குற்று,நெருங்கும் தோறும் வெருளும் மூங்கில் முளை போன்ற ஒளிபெற்ற பற்களைக் காட்டும், பெரிய நகங்களையுடைய நாய்கள்! அவை இமையாத கண்களையுற்றனவாய் எம்மை வளைத்துக் கொண்டு மென் மேலும் பாய்ந்து வந்தன. யாங்கள் அஞ்சி, எழுந்து, விரைந்திட இயலாமல் தளர்ந்து, துன்பம் மிக்க மனத்துடன் மருண்டு, வேறிடம் போகாமல் நின்றிட்டோம். அப்போது காளை களை வென்று திட்டி வேற்று நிலத்தில் கண்ட புதிய பசுவிடம் செருக்குற்று வரும் ஏறு போல அழகுடன் தலைவன் வந்தான்.

எம் அச்சம் போக்கும் நற் சொற்களைக் கூறினான் எங்கள் ஐவகைக் கூந்தலின் அழகைப் புகழ்ந்தான் ‘ஒளி பொருந்திய வளைகளையும், மென் சாயலையும், அழகிய வளைந்த தொப்புளையும், இளமையான மதர்த்த குளிர்ந்த கண்களையும் கொண்ட அசைகின்ற இளையவர்களே! வழி தவறி இவ் இடம் வந்த நான் பல தொல்லைகளையடைந்தேன்’ என்றான்.

நாங்கள் அவனுக்கு மறு மொழி ஒன்றும் கூறாமல் திகைத்து நின்று விட்டோம் அதனால் மனம் வருந்தி, “மென் சாயலிர் வழிகாட்டாவிட்டாலும், என்னோடு ஒரு சொல் பேசுதலும் உங்களுக்குப் பழியாகுமோ? என்று சொல்லிய படியே, யாழென ஒலிக்கும் காதல் வண்டுகள் தங்கியிருந்த அலரிக் கிளையினை ஒடித்து அதில் தேன் உண்ணும் சுரும் பினங்கள் உதறி, பிறகு ஓயாமல் குலைத்து அச்சுறுத்தும் வேட்டை நாய்களை அப் பூங்கொம்பால் அடித்து வாயடக்கி, எங்கள் வாய்மொழியை எதிர் நோக்கி நின்றனன்

களிறு தரு புணர்ச்சி

தினையரிந்த தாளால் வேய்ந்த சிறிய கால்களைப் பெற்ற குடிசையில் இருக்கும், மான் நோக்கியாகிய மனைவி எடுத் தளிப்ப - தேனால் சமைத்த கள்ளினை உண்டு மகிழ்ச்சி தலைக்கேறக் கானவன் காவலை மறந்து விட்டான்

அதனால் பெரிய தினைப்புனைத்தை வாய் மடுத்து, உண்டு யானை பிளிறுவதைக் கண்டு, சிறுமை தாங்காமல் வருந்தி,