பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

195

அளவு கடந்த சினமடைந்தான் கானவன் பாம்பு போன்ற அழகிய வில்லை வளைத்து நாணேற்றிச் சீற்றத்துடன் அம்பை எய்தான் தட்டையை அடித்துக் காடே கல்லென ஒலிக்கும்படி ஒசையுண்டாக்கினான். வாயை மடித்துச் சீழ்க்கையடித்து, யானையை விரட்டினான்.

ஆகவே, சினம் மிக்கு மதமேறி மனம் செருக்கிய யானை, மரங்களை முறித்துக், கார்கால இடிபோல் முழங்கிக் கொண்டு, தன் பெருமைகேற்ப நீண்ட துதிக்கையைப் பெரிய நிலத்தில் ஓங்கியறைந்து, விரைவாக அரிமாப் போல் எங்கள் மேல் வந்தது! உயிர் பிழைக்க இடனறியாமல், மன நடுக்கங்கொண்டு உயிரினும் மிக்க நாணத்தையும் மறந்து வளையொலிக்க, விரைந்து அவனை நெருங்கித் தெய்வம் ஏறின மயிலைப் போல் நடுங்கினோம்

அம்பினை வில்லில் பதித்துக் கடுவிசையுடன் யானை யின் நெற்றியில் அவன் பாய்ச்சிட, குருதி வடிந்து முகம் மறைத்தலால் யானை புறங்கொண்டோடியது பிறகு முருகன் வெறியாடும் மகளிர் கடம்ப மரம் சூழ்ந்து கைக் கோர்த்து நின்றாற் போல அவன் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு நாங்கள் புதிய வெள்ளம் பாய, கரையில் நடுங்கும் வாழை போல் நடுங்கினோம். அப்போது பெருந்தகை! “அஞ்சாதே பெண்ணே நின்னைப் பிரியேன். உன் அணி நலம் நுகர்வேன்” என்று தலைவியின் நெற்றியினைத் துடைத்து நீவி, நீடு நினைந்து, என்னை நோக்கிச் சிரித்தனன்

கூடலும், ஆடலும்

அவ்வாறு அவன் அணுகியவுடன் இயல்பான நாணமும், அச்சமும் வந்து தோன்ற, விரைவாக அவனைவிட்டுத் தலைவி ஒதுங்கினாள் அவன் விடாதவனாக, நின்ற நிலையிலேயே அவளைக் கைகளால் இறுக அணைத்து, இவள் மார்பு தன் மார்பிலே அழுந்தும்படித் தழுவினான்

பழுத்த மிளகுப் பழங்கள் உதிர்ந்து கிடக்கின்ற சுனை யில், இனிய மாம்பழங்களும், வெடித்து தேன் சிந்தும் பலாக்