பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

சென்று கிளிகளை ஒட்டும் தெளிந்த ஓசையை இடை இடையே எழுப்பி அங்கங்கே போய் வாராமல் இருப்பின் நம் அன்னை 'சிறிய கிளியை இவள் ஓட்டுவதை அறிய மாட்டாள்’ என நினைத்துத் தினை காத்தற்குப் பிறரைக் கொணர்ந்து நிறுத்துவாள் அப்படியாயின், தலைவனின் பரந்த மார்பு பின்பு நீ அடைவதற்கு அரிதாகி விடும்” என்றாள் தோழி


384. எள்ளி நகுவோம் தலைவனை

நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
‘சூரர மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய் உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி, கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உர்த் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை - தோழி! நாம் சென்மோ.
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று
என் குறைப் புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம் யாமே.

- நல்வெள்ளியார் அக 32

“நேற்றைய பகலில் அழகிய மணி விளங்கும் அணியை அணிந்த ஒருவன் தினைப்புனத்தில் வந்து தோன்றினான் அவன் மன்னன் மகன் போன்ற தனது தோற்றத்துக்கு மாறு-