பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

19

பட இரந்து உண்ணும் வறியவர் போல் பணிவுடைய சொற்களைப் பலகால் பேசினான் 'சிறிய தினையில் வந்து பொருந்தும் கிளிகளை ஓட்டிய, குளிர் என்ற கருவியுடன் தட்டை என்ற கிளியோட்டும் கருவி ஆகியவற்றைக் கையிலே கொண்டு சூரரமகளிர் என்ற தெய்வப் பெண் போன்று எம்மைப் பார்வையால் தீண்டி வருத்தும் நீவிர் யார்? என்னை வருத்தியவளே! என்று சொல்லி, என் பிடரியினைத் தன் கையால் அணைத்துக் கொண்டான் அவ்வாறு அவன் சொன்ன சொல்லின் கருத்தை உள்ளத்துள் கொண்டு மழை பெய்யப் பெற்ற மண் போல் நெகிழ்ந்து வருந்தியது என் மனம் இந் நிலையை அவன் அறிந்து கொள்வதை யான் அஞ்சினேன் என் மனத்துடன் பொருந்தாத கொடுஞ் சொற்களைக் கூறி அவனுடைய கைகளை அகற்றினேன் அச்சம் கொண்ட பெண் மானைப் போல் விலகி நின்றேன் அவன் தினக்கு அடங்காத என் வன்செயலைக் கண்டமையால் மீண்டும் என்னிடம் கூறும் வலியுடைய சொல் ஒன்றையும் காணாதவன் ஆனான் அவ்வாறாகி, தான் எண்ணிய எண்ணம் நிறைவேறாது போனதால் மனம் வருந்தித் தன் காதல் பெண் யானையை நீங்கிச் செல்லும் ஆண் யானை போன்று சென்றான் அப்புதியவன் அவன் இன்று வந்து நமக்குத் தோற்காதிருத்தல் இல்லை நுட்பமான நல்ல இலக்கணமுடைய வரிகளையுடைய முன் கையை உடைய மூங்கில் போன்ற தோள் இன்பத்தை நுகரும் உரிமை தனக்கே உரியது என்பதை அறியாதவளாய், வருந்தி, என்னால் அடையக்கூடிய காரியத்துக்கு என்னை இரந்து நிற்பதற்கு முயலும் நம் முன் வரும் அவனைப் பழித்து மகிழ்வோம்! தோழி நாம் செல்வோம்! வா!” என்று தோழி தலைவிக்குக் கூறினாள்


385. நம் ஊரைக் கூறாது போனேன்

விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்;
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,