பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

'தோழியே இவன் ஓர் ஆடவனே' என்றாள் உன் போன்று ஆராய்ந்து உணரும் அறிவு வன்மை உடையவர்க்கு அதன் அளவாக ஒரு கோட்பாடு உண்டு இதனையன்றி வேறு ஏதும் காரணம் அறியேன்” என்று செவிலித்தாய்க்கு தோழி அறத்தோடு நின்று கூறினாள்


388. காதலை வெளிப்படையாகக் கூறேல்


'வலந்த வள்ளி மான் ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது” எனத் தம்
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
சேர்ந்தன்று - வாழி, தோழி! - 'யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள்
ஆய்மலர் உண்கண் பசவை
காம நோய்' எனச் செப்பாதீமே.

-
நொச்சி நியமங்கிழார் அக 52

"தோழி வாழி! நம் தாய்க்கு, மரங்கள் ஓங்கியுயர்ந்துள்ள பக்க மலையிடத்துச் சுற்றிய கொடிகள், சுற்றிச் செழித்த வேங்கை மரம் அம் மரத்தினது மிகவும் உயர்ந்துள்ள கிளை யிலே உள்ள பொன் போன்ற புது மலர்களைப் பறிக்க விரும்பிய குறமகள், துன்பத்தைத் தரும் ஒலியையுடைய 'புலி, புலி' என்னும் ஆரவாரத்தை அடுத்து எழுப்பினாள், அதனால் உயர்ந்த பாறைகளின் அடுக்கையுடைய இருண்ட குகையைப் பெற்ற பக்க மலையில் பசுவைக் கவர்கின்ற வலிய புலிய வந்த தால் எழுந்த ஒலியாகும் என்று எண்ணி வில்லை இடக்கை யில் கொண்ட வேடர், தம் மலையை அடுத்துள்ள ஊர் தனிப்பக் 'கல்' என்ற ஓசையுடன் அந்தப் புலியைக் கொல்வ-